அலசல்
Published:Updated:

விழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை?

விழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை?
பிரீமியம் ஸ்டோரி
News
விழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை?

விழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை?

விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக, ஒரு மாதம் கழித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரின் குற்றப் பின்னணி குறித்து போலீஸார் தரும் தகவல்கள் நம்மைப் பதற வைக்கின்றன. அதே நேரத்தில், வெள்ளம்புத்தூர் சம்பவம் தொடர்பாக இருந்துவந்த பல சந்தேகங்கள், இந்த ஒரு நபரின் கைது நடவடிக்கையால் தீர்ந்து விடவில்லை.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் காலனியில் ஒரு விதவைத் தாயின் குடும்பம், பிப்ரவரி 21-ம் தேதி இரவு எதிர்கொண்ட கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கின. தன் வீட்டில் 14 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் இரவில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள் அந்தத் தாயைக் கொலைவெறியுடன் தாக்கிவிட்டு, 14 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு கொண்டனர். 10 வயது மகனைக் கொடூரமாகக் கொலை செய்தனர். மறுநாள் காலையில்தான் கிராம மக்களுக்கு அது தெரியவந்தது. ரத்தவெள்ளத்தில் மயக்கமாகக் கிடந்த தாயும், மகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இன்றுவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

விழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை?

குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டம் நடத்தின. இந்தச் சம்பவம், தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. பாதிக்கப்பட்ட குடும் பத்துக்கு நிவாரணத் தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் எனச் சுமார் 90 போலீஸார் களத்தில் இறக்கப்பட்டனர். இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்துக்குப் பிறகு, அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி என ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், “இதே பாணியில் கொலை செய்யும் குற்றவாளிகளைப் பற்றியத் தகவல்களை வேலூர், கடலூர், திருச்சி சிறைகளில் சேகரித்தோம். கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த தில்லைநாதன் என்ற நபர் பற்றிய தகவல் கிடைத்தது. அந்த நபர் சீர்காழி, நாகை, மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் இதே பாணியில் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. ஏற்கெனவே அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அந்த நபரின் புகைப்படத்தை வெள்ளம் புத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டினோம். அவரை அந்தப் பகுதியில் அடிக்கடி பார்த்ததாகச் சிலர் கூறினர். தலைமறைவாகியிருந்த அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது,. வெள்ளம் புத்தூரில் அந்தக் குற்றங்களைச் செய்ததை ஒப்புக்கொண்டார்.அந்த நபருடன் தொடர்பில் இருந்து, கொள்ளையடித்த நகைகளை விற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த அம்பிகா என்ற பெண்ணையும் கைது செய்துள்ளோம்” என்றார்.

விழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை?

தனிப்படையில் இருந்த காவல் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “தில்லைநாதனுக்குச் சிறு வயதிலேயே கல்யாண ஆசை வந்துள்ளது. அவருக்கு யாரும் பெண் தரவில்லை. அந்த ஆத்திரத்தில் இளம் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.தமிழ் சினிமா ஒன்றில், கதாநாயகனை இரும்புத் தடியால் வில்லன் தாக்கும்போது, கதாநாயகன் சுயநினைவு இழக்கும் காட்சியைப் பார்த்ததாகவும், இரும்புத் தடியால் தலையில் தாக்கினால் சுயநினைவு போய்விடும் என்பதையும் தெரிந்து கொண்டதாகவும் கூறினார். சீர்காழி, மீன்சுருட்டி உள்ளிட்டப் பகுதிகளில் நள்ளிரவில் இளம்பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்து, நகைகளைக் கொள்ளையடித்து வந்துள்ளார். ஆண்கள் இல்லாத, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகள்தான் இவருடைய டார்கெட். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும்போது நேரம் விரையமாவதைத் தவிர்க்க, ஜட்டியுடன் மட்டுமே வீட்டினுள் நுழைவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தலையில் தாக்கி, ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் துடிக்கும்போது அனுபவிப்பது தான் இந்த நபருக்குப் பிடிக்குமாம். சீர்காழியில் அப்படி ஒரு சம்பவத்தின்போதுதான், போலீஸ் இவரை வளைத்தது. 2012-ல் சிறைக்குச் சென்ற இவர், 2016-ல் வெளியே வந்திருக்கிறார். செல்போன் மூலம்தான் இவர் பிடிபட்டார். அதனால், செல்போன் பயன்படுத்துவதையே தவிர்த்து வந்துள்ளார். ஒரே பகுதியில், குற்றங்களைச் செய்தால் போலீஸில் சிக்கிவிடுவோம் என்பதால் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், திண்டிவனம் என ஊர்களை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதால் யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கிறார்கள். அதைத் தனக்குச் சாதகமாக இவர் பயன்படுத்திக்கொண்டார்” என்றார். 

விழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை?

“விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இவர் மீது 11 வழக்குகள் உள்ளன. புவனகிரி, அரியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2008-2012 காலங்களில் இவர் மீது 15 கொலை வழக்குகளும், 18 பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவரால் பாதிக்கப்பட்டு, புகார் அளிக்காத பலர் உண்டு” என்கிறார் திருச்சி சிறைத்துறை அதிகாரி ஒருவர்.

“கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தச் சிறுமி, தற்போது உடல்நலம் தேறி பேசும் நிலையில் இருக்கிறார். அன்றைய தினம் தங்கள் வீட்டுக்குள் நுழைந்தது ஒருவர் அல்ல, நான்கு பேர் என்று தன் உறவினர்களிடம் அவர் இப்போது சொல்லியிருக்கிறார். அவர்களின் அடையாளங்க ளையும் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் குற்றவாளிகளை அடையாளம் காண அந்தச் சிறுமி முன்பாக அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதை போலீஸார் செய்யவில்லை. மாறாக,  ஒரு போட்டோவை வெளியிட்டு, இவர்தான் குற்றவாளி என அறிவித்துள்ள னர். இப்படிச் செய்தது, குற்றவாளி தப்பிக்கவே வழி வகுக்கும்” என்கிறார்கள் வெள்ளம்புத்தூர் மக்கள்.

- ஜெ.முருகன்
படங்கள்: தே.சிலம்பரசன்