Published:Updated:

`கஞ்சா விற்பனை; தகவல் சொன்னதால் விபரீதம்!’ - முன்னாள் கவுன்சிலர் கொலையில் கேங்ஸ்டருக்குத் தொடர்பு?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொலைசெய்யப்பட்ட வசீம் அக்ரம்
கொலைசெய்யப்பட்ட வசீம் அக்ரம்

முன்னாள் கவுன்சிலர் படுகொலை வழக்கில் மொத்தம் 14 பேருக்குத் தொடர்பு. அவர்களில், பிரபல கஞ்சா வியாபாரியும், கேங்ஸ்டருமான டீல் இம்தியாஸ்தான் முதல் நபர். அவர்தான் ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி விட்டிருக்கிறார்’’ என்கிறது வாணியம்பாடி போலீஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம். வயது 43. இவருக்குத் திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த வசீம் அக்ரம் வாணியம்பாடி நகரமன்ற முன்னாள் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். தன் பகுதியில் நடைபெறும் பிரச்னைகளைத் துணிந்து தட்டிக்கேட்கக்கூடிய சமூக ஆர்வலராகவும் அறியப்படுகிறார். இந்தநிலையில், நேற்று மாலை தனது குழந்தைகளுடன் அருகிலுள்ள பள்ளி வாசலுக்குச் சென்று தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த வசீம் அக்ரமை காரில் வந்த ஆறு பேர்கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்தது. பட்டா கத்திகளை சுழற்றிக்கொண்டு காரிலிருந்து இறங்கிய கும்பல், வசீம் அக்ரமைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது.

பதறவைக்கும் சிசிடிவி காட்சி
பதறவைக்கும் சிசிடிவி காட்சி

வெறியாட்டம் நடத்திய அந்தக் கும்பல் வசீம் அக்ரம் தலையை சிதைத்துவிட்டு காரில் ஏறித் தப்பியது. தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீஸார் வசீம் அக்ரமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வசீம் அக்ரமின் உறவினர்கள் ஏராளமானோரும் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பதற்றம் தொற்றிக்கொண்டது. வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட உடலை வாணியம்பாடி மருத்துவமனைக்குக் கொண்டு வருமாறு கூறி வாணியம்பாடி-வேலூர் சாலையில் அமர்ந்து மறியலும் செய்தனர். இதையடுத்து, வசீம் அக்ரமின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. உறவினர்களும் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

சென்னை: கஞ்சியில் விஷம்; கணவனைக் கொலை செய்த மனைவி! -ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

தொடர்ந்து, பதற்றம் நிலவுவதால் வாணியம்பாடி பேருந்து நிலையம் உட்பட நகரத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் அதிவேகமாக வந்த ஒரு காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸாரைப் பார்த்ததும் காரை நிறுத்திய கும்பல் தப்பி ஓடியது. அதில், இருவர் சிக்கிக்கொண்டனர். விசாரணையில் அவர்கள் வண்டலூர் ஓட்டேரியைச் சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி, முகலிவாக்கத்தைச் சேர்ந்த டில்லிகுமார் எனத் தெரியவந்தது.

கொலை செய்யப் பயன்படுத்திய பட்டா கத்திகள்
கொலை செய்யப் பயன்படுத்திய பட்டா கத்திகள்

விசாரணையில், இந்தக் கும்பலுக்கு வசீம் அக்ரமின் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய காரிலிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த பட்டா கத்திகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, வசீம் அக்ரமின் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, ``ஜீவா நகரில் வசித்துவரும் டீல் இம்தியாஸ் என்பவர் கஞ்சா விற்பனை, ரௌடிசம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். சென்னையில் பழைய இரும்புப் பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்வதாகத்தான் டீல் இம்தியாஸைப் பற்றிய அறிமுகம் முதலில் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஜூலை 26-ம் தேதி கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், எஸ்.பி சிபிசக்கரவர்த்தி தலைமையில் 20 பேர் கொண்ட போலீஸார் ஜீவா நகரிலுள்ள டீல் இம்தியாஸின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் எட்டு கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10 செல்போன்கள் சிக்கின. இது தொடர்பாக, டீல் இம்தியாஸின் கூட்டாளிகள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். டீல் இம்தியாஸ் கஞ்சா கும்பலின் தயவுடன் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவருகிறார். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் முன்னாள் கவுன்சிலரும், சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் இருப்பதாகவும், அவர்தான் போலீஸுக்குத் தகவல் கொடுத்ததாகவும் நினைத்திருக்கிறது கஞ்சா கும்பல்.

வாணியம்பாடியில் குவிக்கப்பட்டிருக்கும் போலீஸார்
வாணியம்பாடியில் குவிக்கப்பட்டிருக்கும் போலீஸார்

டீல் இம்தியாஸின் ஆட்கள் வசீம் அக்ரமுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒருநாள் வசீம் அக்ரமின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து டீல் இம்தியாஸின் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரியவந்துள்ளது. பாதுகாப்புக் கோரி ஏற்கெனவே வசீம் அக்ரம் காவல்துறையினரை அணுகியிருக்கிறார். இந்தச் சூழலில்தான் அவர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மொத்தம் 14 பேருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. டீல் இம்தியாஸ்தான் முதல் நபர். அவர்தான் ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி விட்டிருக்கிறார்.

தற்போது, சென்னையில் பதுங்கியிருக்கும் டீல் இம்தியாஸ் கேங்ஸ்டராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறாராம். அவரைப் பிடிக்கவும் தனிப்படை விரைந்திருக்கிறது. சிசிடிவி காட்சிகளையும் பார்வையிட்டு தீர விசாரித்துவருகிறோம். வசீம் அக்ரமின் தலையில் பட்டா கத்தியால் கொடூரமாக வெட்டிச் சிதைத்துள்ளனர். 20-லிருந்து 25 வெட்டுகள் இருக்கின்றன. மண்டை ஓடு நொறுங்கிச் சிதறியிருக்கிறது. மூளையும் வெளியேறி கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு