பிரபாகரனும் பொட்டு அம்மானும் உயிருடன் இருக்கிறார்கள்... பிரபாகரன் உயிருடன் இல்லை, பொட்டு அம்மான் மட்டும் இருக்கிறார்... பொட்டு அம்மானும் உயிருடன் இல்லை... இப்படியாகப் பலவிதமான செய்திகளும் வதந்திகளும் அவ்வப்போது கிளம்பும். பிறகு, அதுவாகவே அடங்கியும் விடும்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தது மே மாதத்தில். விடுதலைப்புலிகளின் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் நவம்பர் மாதம் நடக்கும். இதனால், மே மற்றும் நவம்பர் மாதங்களில் இதுபோன்ற வதந்திகள் அதிகமாகக் கிளம்பும். ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பு சம்பந்தமான விவாதங்கள் எழும்போதெல்லாம் இதுபோன்ற வதந்திகள், செய்திகளாக உலா வரும். சமீபத்தில் இதுபோன்ற ஒரு செய்தி உலா வந்தது.

‘ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். இந்தச் செய்தி வெளியான நாளில், பி.ஜே.பி-யின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளி, இத்தாலியில் வசித்து வருகிறார்’ என்று பதிவிட்டார். உடனே, சுவாமி யாரைச் சொல்கிறார் என்ற விவாதம் கிளம்பியது. பொட்டு அம்மானைத்தான் சுவாமி சொல்கிறார் என்று பலர் சொல்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 29 பேர் தவிர பிரபாகரன், பொட்டு அம்மான், குமரன் பத்மநாபன், அகிலா ஆகிய நான்கு பேரின் பெயர்களும் வழக்கில் இருந்தன. அகிலா யார் என்று இன்னமும் அடையாளம் காண முடியவில்லை. குமரன் பத்மநாபன், 2009 போருக்குப் பின்னால் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசின் பாதுகாப்பில் இருந்துவருகிறார். பிரபாகரன் கொல்லப்பட்டதற்குச் சாட்சியாக, சில வீடியோ காட்சிகளை வெளியிட்டது இலங்கை ராணுவம். ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுத்துறை தலைவராக இருந்த பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்லை. அதனால், பிரபாகரனைவிட பொட்டு அம்மான்மீதான மர்மம் குறித்தே பேசப்பட்டது.

‘பொட்டு அம்மான் இறந்துவிட்டார்’ என இலங்கை அரசு மறுத்திருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘பொட்டு அம்மான் தலைமையில் மீண்டும் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு இயங்கிவருகிறது’ என எச்சரிக்கை விடுத்தது இன்டர்போல். மேலும், தேடப்படுவோர் பட்டியலில், பொட்டு அம்மானின் பெயரையும் சேர்த்தது. இந்த நிலையில்தான், சுவாமியின் ட்வீட் முக்கியத்துவம் பெறுகிறது.

‘‘இறுதிக்கட்டப் போரின்போது சில உதவிகள் பெறுவதற்காக வெளிநாடு சென்றதால், பொட்டு அம்மான் உயிர் தப்பிவிட்டார். தற்போது அவர், இத்தாலியில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர்தான், உலகம் முழுவதிலும் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் புலிப்படையை அமைத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘விடுதலைப் புலிகளின் எண்ணத்தை மீண்டும் நிறைவேற்ற சிலர் சில வேலைகளைச் செய்து வருகிறார்கள்’ என்று இலங்கை அதிபர் சிறீசேன சமீபத்தில் சொன்னார். அது பொட்டு அம்மானை மனதில் வைத்துச் சொன்னதுதான். பொட்டு அம்மான் அப்படிச் செய்தால், அவருக்கு உதவி செய்ய புலம் பெயர்ந்த தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் பண உதவி செய்ய, அதன் மூலமாக ஆட்களைத் திரட்டும் காரியங்களும் நடக்கும். அதனால்தான், மத்திய உள்துறையும் உளவுத்துறையும் இந்த விஷயத்தில் சீரியஸாக கண்காணிப்பு காரியங்களைச் செய்து வருகிறது” என்று மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார்.

‘‘கடந்த 15 நாள்களில், தமிழக முகாம்களில் இருந்த 32 பேர் இலங்கைக்குக் கள்ளத்தனமாக நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து போயிருக்கிறார்கள். இதுபோல தமிழகத்திலிருந்து செல்லும் சிலர், இலங்கைக் கடற்படையிடம் சிக்குகிறார்கள். அப்போது, ‘எங்கள் வீடு, நிலங்கள், உடைமைகள் யாவும் இலங்கையில் உள்ளன. அவற்றை வைத்து வாழ்வதற்காகத்தான் வருகிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு எவ்வித உரிமையும் தராமல், கிட்டத்தட்ட கைதி போல நடத்துகின்றனர். எனவே, எங்களுக்குச் சொந்தமான பூமியில் எங்களை வாழவிடுங்கள்’ என்று கூறுகிறார்கள். அவர்களை மன்னித்து, அவர்களின் ஊர்களில் வாழ இலங்கை அரசு அனுமதிக்கிறது. அவர்கள் சில மாதங்கள் கழித்து பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்று, விடுதலைப்புலிகளுடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்” என்ற தகவலும் இலங்கை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்தத் தகவலை விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகள் மறுக்கின்றன. “மத்திய உளவுத்துறையால் கிளப்பிவிடப்படும் வதந்திகள்தான் இவை. ஏழு தமிழர்கள் விடுதலைக்குத் தடையாக இந்த விவகாரத்தைக் கிளப்புகிறார்கள். பொட்டு அம்மான் இத்தாலியில் இருக்கிறார் என்றால், இத்தாலி அரசாங்கத்திடம் கேட்டு அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தி அழைத்து வரவேண்டியதுதானே? ராஜீவ் கொலை வழக்கில் பெயர் உள்ள குமரன் பத்மநாபன் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 10 ஆண்டுகளாக இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜெயின் கமிஷன் விசாரணையை மீண்டும் தொடங்கினால், ராஜீவ் வழக்கின் பல மர்மங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும். துணிச்சல் இருந்தால் ஜெயின் கமிஷன் விசாரணையைத் தொடரட்டும்” என்கிறார் இயக்குநர் கெளதமன்.

- மு.இராகவன்