“இது புனித நகரம். இதைக் கெடுக்கும் வகையில் இங்கு கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது” என்று குமுறுகிறார்கள் கும்பகோணவாசிகள்.

“கும்பகோணத்திலும், கும்ப கோணத்தைச் சுற்றியுள்ள வலையப்பேட்டை, ஆடுதுறை, பட்டீஸ்வரம், மேலகாவேரி ஆகிய இடங்களிலும் சிலர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுகிறார்கள். முன்பு, காரைக்காலிலிருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி எடுத்து வந்து விற்றுவந்த இந்தக் கும்பல், இப்போது ஸ்பிரிட் பவுடரை மொத்தமாக வாங்கி வந்து கலந்து, பாக்கெட்களில் அடைத்து விற்கிறது. ரஸ்னா போன்ற பிரபலக் குளிர்பானங்களின் பெயர்களை அந்த பாக்கெட்களில் அச்சிட்டுள்ளார்கள். இங்கு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் அனைவரும், தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிராக ஓவராகக் குரல் கொடுக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் கொடுமை.அதனால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை” என்று போலீஸார் சிலர் நம்மிடம் புலம்பினர்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நகரத் தலைவரான கண்ணன், “இங்கு, 24 மணி நேரமும் தங்குதடையின்றி கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது. அதிகமான போதை தருவதற்காக குட்கா, ஹான்ஸ் போன்ற பொருள்களையும் சாராயத்தில் கலக்கிறார்கள். ‘பாண்டி ஐஸ்’ என்ற பெயரில் விற்கப்படும் கள்ளச்சாராய பாக்கெட்கள்தான், அமோகமாக விற்பனையாகிறது என்கிறார்கள். போலீஸிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சில நேரங்களில் பெயரளவுக்கு மட்டும் வழக்குப் பதிந்துவிட்டு அவர்களை விட்டுவிடுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலா, “இங்கு, கள்ளச்சாராயத்துடன் கஞ்சா விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது. சாராயம் விற்பனை நடக்கும் இடங்கள் வழியாகத்தான் தினமும் போலீஸார் சென்று வருகிறார்கள். ஆனால், மாமூல் போய்விடுவதால் அவர்களை போலீஸார் கண்டுகொள்வதில்லை. பாண்டிச்சேரியிலிருந்து மதுபானங்களைக் கடத்திவந்தும் பலர் விற்பனை செய்கிறார்கள். கும்பகோணம் நகரில் ஆங்காங்கே போதை ஆசாமிகள் விழுந்துகிடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கிறார்கள். இதனால், புனித நகரத்தின் மாண்பு கெடுகிறது. பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் இந்தச் சாராய அரக்கனிடமிருந்து பாதுகாக்கவும், கோயில் நகரத்தைக் காக்கவும் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

இது குறித்துக் கும்பகோணம் டி.எஸ்.பி கணேஷமூர்த்தியிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி சாராயத்தை இங்கு விற்பனை செய்வது பற்றியோ, ஐஸ் கம்பெனியின் பெயரைப் போட்டுச் சாராயம் விற்கப்படுவது பற்றியோ எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, “அண்மையில் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்தவர்களைக் கைது செய்தோம். அவர்களிடமிருந்து 2,000-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தோம். இப்போது, மதுவிலக்குப் பிரிவில் புதிய டி.எஸ்.பி பொறுப்பேற்றிருக்கிறார். அவரை, கும்பகோணம் பகுதியிலேயே தங்கியிருந்து கண்காணிக்கச் சொல்லியிருக்கிறேன். தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு முற்றிலுமாக கள்ளச்சாரய விற்பனையைத் தடுப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

- கே.குணசீலன், படங்கள்: ம.அரவிந்த்