தீயின் நாக்குகளுக்கு 94 பச்சிளம் பள்ளிச் சிறார்கள் பலி கொடுக்கப்பட்டதன் ரணம்... 14 ஆண்டுகளைக் கடந்தபின்னும் ஆறவில்லை. 2004-ம் ஆண்டு ஜூலை 16, கும்பகோணம், ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் நடந்த அந்தக் கொடூரத்துக்கு, ‘பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டதே காரணம்’ என்று சாட்டையடி தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 14 ஆண்டுகள் உருண்டுவிட்ட பின்னரும்கூட இந்த அரசாங்கம், கல்வித்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் என யாரும் குழந்தைகளின் உயிர்மீது அக்கறை கொள்ளவே இல்லை என்பதுதான் நிஜம். ஒரு சோற்றுப் பதமாகப் பயமுறுத்துகிறது, சென்னை அருகே பாடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீவிவேகானந்தா வித்யாசாலை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

‘‘பள்ளி வளாகத்தின் ஒவ்வோர் அங்குலமும் விதிமீறல்களைச் சுமந்து நிற்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டிப் போராடிக் கொண்டிருக்கிறேன். நீங்களாவது குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’’ என்றபடி சமூக ஆர்வலர் பாலாஜி நம்மைத் தொடர்புகொள்ள, விசாரணையில் இறங்கினோம்.

இதைப் பற்றிப் பேசும் பாலாஜி, ‘‘ஒரே பெயரில் கதவு எண் 73 மற்றும் 40 என இரு இடங்களில் இந்தப் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த இரண்டு கட்டடங்களும் சுமார் 50 மீட்டர் இடைவெளியில் இருக்கின்றன. இரண்டு கட்டங்களுக்கு இடையே சாலை இருக்கிறது. அகலம் 20 அடி என்றாலும், ஆக்கிரமிப்புகள் இருப்பதால், ஆறு அடிதான் புழக்கத்தில் உள்ளது. ஏதாவது ஆபத்து என்றால், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் இந்த வழியாக வருவது கஷ்டம். கதவு எண் 40-ல் கட்டப்பட்டுள்ள கட்டடம், மழைநீர்க் கால்வாய் கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. டி.விஜயலட்சுமி மற்றும் எஸ்.விஜயலட்சுமி என இரண்டு நபர்கள் போல் கணக்குக்காட்டி அனுமதி வாங்கியுள்ளனர்.

மாணவர்கள் வந்துபோகும் நுழைவாயில் மூன்று அடிக்கும் குறைவானது. இதுவும் செப்டிக் டேங்க்மீது கட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத அசம்பாவிதம் நடந்தால், குழந்தைகள் எப்படி வெளியேறுவார்கள்? விதிகளை மீறி இரண்டு மாடிகள் கட்டியுள்ளனர். விளையாட்டு மைதானம் இல்லை. பள்ளிக்கூடம் நடத்துவதற்கு அனுமதி அளித்த திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் சான்றிதழ் அளித்த சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலருக்கும், ‘இங்கே பள்ளிக்கூடம் கட்டுவதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்?’ என்று கேட்டுப் பலமுறை புகார் அனுப்பிவிட்டேன். இன்றுவரை பதில் இல்லை. கும்பகோணத்தில் நடந்த கொடூரம் வேறு எங்கும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் போராடுகிறேன்’’ என்று வேதனையுடன் சொன்னார்.

தவிர சில நாட்களுக்கு முன்பு இந்தப் பள்ளியின் பின்புறம் சாக்கடை தூர்வாரும் பணி நடந்தபோது, பள்ளியின் சுவர் இடிந்திருக்கிறது. இதனால், அச்சமடைந்த பெற்றோர் பள்ளியை மூடும்படி நிர்வாகத்திடம் சொல்லி இருக்கின்றனர் என்ற தகவலும் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது.

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், “கால்வாயின் எதிரே பள்ளிக் கட்டடம் அமைந்துள்ள இடமானது, எங்களின் ஆவணங்கள்படி புறம்போக்கு நிலம்தான்” என்றனர். ஆனால், கட்டட உரிமைச் சான்றிதழை இதே வட்டாட்சியர் அலுவலகம்தான் வழங்கியிருக்கிறது.

முகப்பேர் சுகாதாரத் துறை அலுவலக அதிகாரிகள், ‘‘விளையாட்டு மைதானம், காற்றோட்டமான அறைகள், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வந்துசெல்லும் அளவுக்கான சாலைகள் இருக்கவேண்டும். தீயணைப்புத்துறை சான்றிதழ் மற்றும் கட்டட உறுதி சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே நாங்கள் சான்றிதழ் தருவோம். பள்ளிகள் செயல்படும் இரண்டு இடங்களில் ஓர் இடத்துக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கியுள்ளோம். இதற்கு மேல் ஏதும் கேட்காதீர்கள்’’ என்று நம்மை அனுப்பி வைத்துவிட்டனர்.

அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து அந்தப் பள்ளிக்குச் சான்றிதழ் பெற்றிருப்பதாகக் கூறப்படவே, நிலையத்தின் அதிகாரி புல்லானியிடம் (இவர், தற்போது மாற்றலாகிவிட்டார்.) கேட்டபோது, ‘‘அது ஜெ.ஜெ. நகர் தீயணைப்புத் துறையின் கீழ்தான் வருகிறது. ஆனால், அந்த ஃபைல் எப்படி என் டேபிளுக்கு வந்தது என்று தெரியவில்லை. தவறுதலாகக் கையெழுத்து போட்ட விஷயம் நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. உடனடியாக அந்தச் சான்றிதழை ரத்து செய்ய ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

பள்ளியின் தாளாளர் விஜயலட்சுமியைச் சந்தித்தோம். “ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் குறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்தி வருகிறோம். எங்கள் பள்ளிமீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. முறையான வழியில் சான்றிதழ்கள் பெற்றுள்ளோம். இடம் வாங்கும்போது என்னுடைய இனிஷியல் தவறாகப் பதிவாகிவிட்டது. அதனால்தான் இரண்டு பெயர்களில் ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. இரண்டாவது மாடியில் ஆஸ்பெட்டாஸ் கூரை போட்டுத் தேவையில்லாத பொருட்களை மட்டுமே வைத்துள்ளோம். அங்கு குழந்தைகளுக்குப் பாடம் நடத்தவில்லை. எங்களைப் பற்றிக் குற்றச்சாட்டு சொல்லும் அந்த நபர், ‘சர்ட்டிபிகேட்டுகளை நானே அதிகாரிகளிடம் வாங்கித் தருகிறேன்... பணம் தாருங்கள்’ என்று வந்து நின்றார். முடியாது என்று அனுப்பிவிட்டதால், வீண் புகார்களைச் சுமத்தி வருகிறார்” என்றார்.

இந்தப் பள்ளி குறித்த தகவல்களை உதவிக் கல்வி அலுவலர் புனிதவதி, மாவட்டக் கல்வி அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, ‘‘அங்கு வீதிமீறல் ஏதும் இல்லை’’ என, சொல்லி வைத்தாற்போல இருவரும் ஒரே பதிலையே தந்தார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிமுறையை மீறி அனைத்து அனுமதிகளையும் வழங்கி விட்டு, இப்போது சமாளிக்கிறார்கள் என்பது நமக்குப் புரிந்தது.

தயவுசெய்து குழந்தைகளின் உயிரோடு விளையாடாதீர்கள்!

- ஜெ.அன்பரசன்

படங்கள்: வீ.நாகமணி, ப.சரவணகுமார்