Published:Updated:

“MeToo-வின் முதல் வெற்றி!”

“MeToo-வின் முதல் வெற்றி!”
பிரீமியம் ஸ்டோரி
“MeToo-வின் முதல் வெற்றி!”

“MeToo-வின் முதல் வெற்றி!”

“MeToo-வின் முதல் வெற்றி!”

“MeToo-வின் முதல் வெற்றி!”

Published:Updated:
“MeToo-வின் முதல் வெற்றி!”
பிரீமியம் ஸ்டோரி
“MeToo-வின் முதல் வெற்றி!”

ங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்வது தங்களுக்குத்தான் அவமானம் என்று பல நூற்றாண்டுகளாக நம்பிக்கொண்டிருந்த பெண்கள், ‘நானும் பாலியல் தொல்லையைச் சந்திருக்கிறேன்’ என்று ‘மீடூ’ (#MeToo) ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் உரக்கப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதை சிலர் ஆதரித்தும், சிலர் பாதிக்கப்பட்ட பெண்களையே கொச்சைப்படுத்தியும் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.

“MeToo-வின் முதல் வெற்றி!”

இந்நிலையில், சில கேள்விகள் எழுகின்றன. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மன உளைச்சலுக்கு ஒற்றை வடிகாலாக இருக்கிற ‘மீடூ’ இயக்கத்தின் எதிர்காலம் என்ன? ‘மீடூ’ என்று வெறும் பகிர்தலோடு நின்றுவிடாமல், தங்களுக்குத் தொல்லை கொடுத்த ஆண்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுக்க சட்டத்தில் வழிகள் இருக்கின்றனவா? அதற்கு சாட்சிகள் வேண்டுமா? ஓர் ஆண் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தான் என்று ஒரு பெண் வெளிப்படையாகச் சொல்வதற்கே பெரிய  துணிச்சல் வேண்டும். அப்படித் துணிச்சலாக பேசுகிற பெண்களை வசைபாடும் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது?

‘‘எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நிச்சயம் தண்டனை வாங்கித்தர முடியும்’’ என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். அவரிடம் பேசினோம்.  ‘‘இவற்றில் பெரும்பாலான சம்பவங்களில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன. குற்றம் சொன்னவர் யாரென்றே தெரியாத நிலையில், சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அப்படியே குற்றம் சுமத்தியவர் முன்வந்து புகார் அளித்தாலும், பாலியல் தொல்லை விவகாரத்தில் நேரடி சாட்சிகள் கிடைக்காது. அதனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளையே சட்டம் ஆதாரமாக எடுத்துக்கொள்ளும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததைத் தொகுத்துச் சொல்லும் விதத்தில் இருக்கிற உண்மைத்தன்மை... எந்த நாளில், எப்போது தனக்கு இப்படி நிகழ்ந்தது என்பதை குறுக்கு விசாரணையின்போது சரியாகச் சொல்வது... நடந்த பாலியல் தொல்லையை நேரில் பார்த்தவர்கள் சொல்வது ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை பெற்றுத்தர முடியும். வாட்ஸ்அப் மெசேஜ்களை, ஐ.டி நிபுணர்களை வைத்து நிரூபணம் செய்தும், தப்பு செய்தவருக்கு தண்டனை பெற்றுத்தர முடியும். உதாரணமாக, சின்மயி விஷயத்தில், அம்மா மற்றும் உடன் இருந்தவர்களின் சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொடுக்கலாம். அவை நேர்த்தியாகவும் நம்பத்தகுந்த வகையிலும் இருக்கும்பட்சத்தில், அவர்களின் சாட்சியங்களை சட்டம் ஏற்றுக்கொள்ளும். நீதிமன்றங்கள் தண்டனை அளிக்கும்’’ என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“MeToo-வின் முதல் வெற்றி!”

இது, உலக அளவில் பெரிய இயக்கமாக மாறலாம் என்கிறார் உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன். அவர், ‘‘இளவயதில் நான் சந்தித்த கசப்பான அனுபவம் இது. ஒரு நீதிபதியின் செகரெட்டரி அவன். ஒரு ரயில் பயணத்தின்போது, என்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றான். ‘சத்தம்போட்டு எல்லோரையும் எழுப்பிவிடுவேன்’ என்றேன். ‘அப்படிச் செய்தால், உங்கள்மீதே பழியைத் திருப்பிவிடுவேன்’ என்று மிரட்டினான். நடுங்கிவிட்டேன். அப்படியொரு காலகட்டமும் இருந்தது.

பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது சமூக வலைதளங்களில் தைரியமாகப் பேசமுடிகிறது. இது எவ்வளவு பெரிய விஷயம்! அதற்கு மோசமான கமென்ட் இடுபவர்களின் பெயர்களும் பொதுவெளியில் எல்லோருக்கும் தெரிகிறபடிதானே இருக்கிறது. அதனால் அவர்களின் முகத்திரையும் கிழியும். பெண்கள் இதற்கு சங்கடப்படவோ, அச்சப்படவோ தேவையே இல்லை. தனக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லையை வெளியில் சொல்லும் எல்லாப் பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்தினர் ஆதரவாக நிற்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்கும் பக்குவப்பட்டவர்கள், ‘மீடூ’வில் பங்கெடுக்கலாம். தனக்குப் பிடிக்காத ஆண்களைப் பழிவாங்குவதற்கான உத்தியாக இதை மாற்றாமல் உண்மையாகப் போராடினால், இது உலகளவில் பெண்களைப் பாதுகாக்கும் பெரிய இயக்கமாக மாறும்’’ என்றார்.

“MeToo-வின் முதல் வெற்றி!”

பெண்ணியவாதிகள் பலரும் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கிறார்கள். ‘‘எப்போதோ தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் போகலாம். அது தெரிந்தேதான் பலரும் நடந்ததை பகிரங்கமாகச் சொல்கிறார்கள். ஆனால், ‘MeToo’ என்பது ஓர் ஆயுதமாக இப்போது மாறிவிட்டது. அத்துமீற நினைக்கும் எந்த ஆணுக்கும் இனி இது ஞாபகத்தில் வரும். இனி, தப்பு செய்ய யோசிப்பார்கள். இந்தப் பயணத்தின் முதல் வெற்றி இதுதான்’’ என்கிறார்கள் அவர்கள்.
சொல்லப்போனால், முக்கியமான வெற்றியும் அதுதான். 

- ஆ.சாந்தி கணேஷ்  

 
‘உண்மைதான் எங்கள் ஆயுதம்!’’

#M
eToo இயக்கம் இந்தியாவில் முக்கியமான வெற்றியைக் கண்டிருக்கிறது. 20 பெண் பத்திரிகையாளர்களால் குற்றம் சாட்டப்பட்ட மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்திருக்கிறார். அக்பர்மீது முதலில் குற்றம் சுமத்தியவர் ப்ரியா ரமணி. அவரின் கணவர் சமர் ஹலர்ன்கர், இந்தப் புகாரை வெளியில் சொன்னபிறகு தங்கள் குடும்பத்துக்கு நேர்ந்தவற்றைப் பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து:

“MeToo-வின் முதல் வெற்றி!”

‘‘இன்னும் பல இளம்பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைச் சொன்னபோது, இனியும் அமைதியாக இருக்கக்கூடாது என ப்ரியா முடிவெடுத்தாள். பத்திரிகைத் துறையிலும் அரசியலிலும் சக்திவாய்ந்த ஒரு மனிதரைக் குற்றம் சாட்டும்போது, நாமே தாக்குதல் இலக்காக ஆகிவிடுவோம் என்பது தெரியும். அதுதான் நடந்தது. எங்கள் வாழ்வில் அமைதி பறிபோனது. எங்கள் இருவரின் போன்களும் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கின்றன.

அக்பர் இப்போது மானநஷ்ட வழக்குப் போட்டிருக்கிறார். அவரின் நோக்கம் தெளிவானது. அவர் ப்ரியாவை மட்டும் பயமுறுத்தவில்லை. யாராவது புகார் செய்தால் இதுதான் கதி என மிரட்டி, எல்லோரையும் அமைதியாக்கும் முயற்சி இது. ஆளும்கட்சி மட்டுமில்லை, எதிர்க்கட்சியும் இதில் புகார் சொல்லும் பெண்கள் பக்கம் நிற்கவில்லை. எல்லோரும் ஒன்றுதானே!

‘புகார் சொன்னால் வேலை போய்விடும், வாழ்க்கை போய்விடும்’ என பயந்திருந்த பெண்கள் பொதுவெளிக்கு வருகிறார்கள். இவர்களை மிரட்ட அக்பர் போன்றவர்கள் பல ஆயுதங்களை எடுக்கிறார்கள். எங்களிடம் ஒரே ஓர் ஆயுதம்தான் இருக்கிறது. அது, உண்மை!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism