Published:Updated:

சீக்கியர் கலவர வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

சீக்கியர் கலவர வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
சீக்கியர் கலவர வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
சீக்கியர் கலவர வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற கலவர வழக்கு ஒன்றில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.

இந்த கலவரம் தொடர்பான ஒரு வழக்கில் 5 சீக்கியர்களை கொன்றதாக முன்னாள் அமைச்சர் சஜ்ஜன் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சஜ்ஜன் குமாரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

##~~##
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், முன்னாள் கவுன்சிலர் பல்வான் கோக்கர், கிரிதரி லால் மற்றும் கேப்டன் பக்மல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 2 குற்றவாளிகளான முன்னாள் எம்.எல்.ஏ மகேந்தர் யாதவ், கிஷன் கோக்கர் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.