தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 2018, மே 22-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், இறந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கைகள் இப்போது வெளியாகியுள்ளன. பலர் தலையில் தோட்டாக்கள் பாய்ந்து இறந்துள்ளனர். பூட்ஸ் கால்களால் நெஞ்சில் மிதிபட்டும், தலையில் லத்தியால் தாக்கப்பட்டும் சிலர் இறந்திருக்கிறார்கள்.

தாங்கள் சுவாசிக்கும் காற்றிலும், குடிக்கும் நீரிலும் ஆலையின் கழிவுகள் கலப்பதால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறோம் என்று புகார் எழுப்பிவந்த மக்கள்தான், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்றது, காவல்துறை. அந்தக் கலவரமே, காவல்துறையால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் என்று குற்றம்சாட்டும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும், அதற்கான சான்றுகளைக் குவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், இறந்தவர்கள் அனைவரின் உடற்கூறாய்வு அறிக்கைகளும், நமக்குக் கிடைத்தன. இந்த உடற்கூறாய்வு அறிக்கைகளைப் பார்த்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ‘கூட்டத்தைக் கலைக்க அல்ல... கொன்று குவிக்கவே துப்பாக்கிச்சூட்டை போலீஸ் நடத்தியுள்ளது’ என்று குற்றம்சாட்டுகின்றனர்.

வழக்கறிஞராக ஆக வேண்டுமென்ற கனவுடன் இருந்த 18 வயது ஸ்னோலினின் பின்கழுத்தில் பாய்ந்த குண்டு, வாய் வழியாக வெளியேறியிருக்கிறது. 22 வயது ரஞ்சித்குமாரின் மூளையைத் துளைத்துக்கொண்டு சென்றுள்ளது, போலீஸின் தோட்டா. வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த 40 வயது ஜான்சியின் மூளைச் சதைகளே காணாமல்போகும் அளவுக்கு, துப்பாக்கிக் குண்டு அவரது தலையைச் சிதைத்துள்ளது. போராட்டத்தின் முன்வரிசையில் நின்று கோஷமிட்டுக்கொண்டிருந்த 45 வயது தமிழரசனின் இடது பின்னந்தலையைத் துளைத்துச்சென்று நெற்றி வழியாகக் குண்டு வெளியேறியிருக்கிறது. இறந்தவர்களில் மிக வயதானவரான கந்தையாவின் உடல் கூறாய்வில், அவரது வயிற்றில் உணவுப் பருக்கைகள் தென்பட்டிருக்கின்றன. சாப்பிட்டுவிட்டுவந்த சில நிமிடங்களில் , அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இடது மார்பைக் குண்டு துளைத்ததால், நாளங்களில் இருந்து கட்டுக்கடங்காமல் ரத்தம் வெளியேறி இறந்திருக்கிறார், 40 வயது கிளாஸ்டன்.

துப்பாக்கிக் குண்டுகளின் தேவையின்றி, பூட்ஸ் கால்களால் நெஞ்சில் மிதிப்பட்டும், தலையில் லத்தியால் அடிபட்டதாலுமே இறந்திருக்கிறார் செல்வசேகர். 34 வயது மணிராஜனுக்கு தலையிலும், 42 வயது ஜெயராமனுக்கு முகத்திலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து, உயிரிழந்திருக் கிறார்கள். இத்தனை உயிர்களைப் பலிவாங்கியபின், மூடப்பட்டது, ஸ்டெர்லைட் ஆலை. எப்போது திறக்கப்படுமோ என்ற அச்சம் இன்னும் அகலவில்லை. அப்படியானால், ஆலையை மூடுவதற்காக, விலையாகக் கொடுக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயம் என்ன என்கிற கேள்வி, ஜனநாயகத்தை நம்பும் தமிழ் மக்களிடம் இன்னும் எஞ்சி நிற்கிறது.

போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சிலரின் உடற்கூறாய்வு அறிக்கைகள், முன்பே கொடுக்கப்பட்டுவிட்டன. சிலருக்கு மட்டும் ஏழு மாதங்களுக்குப் பின்பு, சமீபத்தில்தான் கொடுத்துள்ளனர். உடற் கூறாய்வு அறிக்கையைக் கொடுப்பதில் ஏன் இத்தனை முரணும் தாமதமும்? இந்தக் கேள்வியை, உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் குழுவில் இருந்த டாக்டர் வினோத் அசோக் சௌத்ரியிடம் வைத்ததற்கு, ‘‘இறந்தவர்கள் அனைவரின் உடற்கூறாய்வு அறிக்கைகளையும், கடந்த ஜூன் மாதத்துக்குள் நாங்கள் ஒப்படைத்துவிட்டோம். உறவினர்களிடம் ஏன் தாமதமாகக் கொடுக்கப்பட்டன என்று இந்த வழக்கை விசாரணை செய்பவர்களிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் தான், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டுவிட்ட நிலையில், இடைக்கால அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது, நெல்லை மண்டல ஐ.ஜி–யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், தற்போது பதவிஉயர்வு பெற்று, சமூகநீதி மற்றும் மனித உரிமைகளுக்கான கூடுதல் காவல்துறை இயக்குநராகப் பணியாற்றிவருகிறார் என்பது வேதனையான விநோதம்.

கூட்டத்தைக் கலைப்பதற்கே துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டது என்பது காவல்துறையின் வாதம். ஆனால், பலருக்கும் கழுத்துக்கு மேல்தான் குண்டுகள் பாய்ந்துள்ளன. கூட்டத்தைக் கலைப்பதற்காக என்றால், எதற்காகத் தலையை நோக்கிச் சுட வேண்டும் என்ற கேள்விக்குக் காவல்துறையின் பதில் என்ன?

அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷன் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “ஏழுகட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட வட்டாசியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை இனிமேல்தான் விசாரிக்க உள்ளோம். துப்பாக்கிச்சூடு குறித்த ஆதாரங்களை யார் வேண்டு மானாலும் கமிஷனிடம் சமர்ப்பிக்கலாம்” என்றனர்.

‘துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரையாவது கைது செய்திருக்கிறீர்களா?’ என்று சி.பி.ஐ தரப்பினரிடம் கேட்டோம். அதற்கு, ‘‘இதுவரை யாரையும் கைது செய்ய வில்லை. அனுமதி இல்லாமல் இதற்கு மேல் எதுவும் பேசமுடியாது’’ என்று கூறிவிட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் தொடர்பாக அதிமுக்கியமான ஆதார ஆவணத்தை வெளியிட்ட நாளிலேயே காணாமல் போயிருக்கிறார் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிவந்த முகிலன். அவர் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களின்படி, துப்பாக்கியால் மக்களைச் சுட்டபடி சென்ற ஒரு வேன், ஆட்சியர் அலுவலக வாயிலிலிருந்து வெளியேறியபோது தான், நெல்லை மண்டல டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கரின் வாகனம் பின்னால் செல்கிறது.

இது தொடர்பாக கபில்குமாரிடம் பேசினோம். அவர், ‘‘இல்லை. நாங்கள் அனைத்து வகையான எச்சரிக்கைகளையும் கொடுத்தோம். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வசதி எங்களிடம் இல்லை. ஆனால், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசினோம். எங்களின் எந்த எச்சரிக் கைக்கும் கூட்டம் கட்டுப்படவில்லை. எனவேதான், துப்பாக்கியால் சுட்டோம். ஸ்நைப்பர் வகை துப்பாக்கிகள் தமிழக போலீஸிடம் கிடையாது. நாங்கள் ரைஃபிள் துப்பாக்கிகளால்தான் சுட்டோம்” என்றார்.

உடற்கூறாய்வு விவரங்கள் வந்த பிறகு, ஸ்னோலினின் தாய் வனிதாவிடம் பேசினோம். “என் பொண்ணு எப்பவுமே எங்கூடதான் படுத்துத் தூங்குவா. இப்போ, நான் மட்டும் தனியா துாங்குறேன். எப்பிடித் தூக்கம் வரும். ஒரு ஈ, எறும்பைக் கூட கொல்லக்கூடாதுன்னு நினைக்கிறவ என் மகள். அந்தப்புள்ளைய இவ்வளவு வலியோட சாகடிச்சிட்டாங்களே...’’ என்று அவர் கதறினார்.

இந்த கதறல்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

- சா.ஜெ.முகில் தங்கம், ஐஷ்வர்யா

சட்டத்துக்குப் புறம்பானது!

துப்பாக்கிச்சூட்டில் நடந்துள்ள விதிமீறல்கள் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் விளக்கினார்.

“பொதுவாக, மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்கு முதலில் ‘மைக்’கில் எச்சரிக்கை விடுக்கப்படும். அப்படியும் கலைந்து செல்லாவிட்டால், தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும். இதற்கான வசதிகள், தூத்துக்குடி மாநகரக் காவல்துறையிடம் உள்ளன. தண்ணீர் பீய்ச்சி அடித்துக்கூட, கூட்டம் கலையவில்லையென்றால், ரப்பர் குண்டுகளால் சுடுவார்கள். அல்லது, பெல்லட் வகை குண்டுகளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை உபயோகித்தால், சிறு காயங்களுடன் அவர்களைப் பிழைக்கச் செய்துவிடலாம். முன்பு, 0.410 மஸ்கட் வகை துப்பாக்கிகளை போலீஸ் உபயோகப்படுத்தி வந்தது. ஆனால், காவல்துறையை மேம்படுத்துவதற்காக அதையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு, சில நவீன ரகத் துப்பாக்கிகளை அறிமுகப்படுத்தினார்கள். தலையைக் குண்டு துளைத்துச்சென்றிருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிக் குண்டுகள் என்றால், அவை இப்படியெல்லாம் தலையைத் துளைத்துச் சென்றிருக்காது. 7.62 கேலிபர் அல்லது 303 ரைஃபிள் வகைத் துப்பாக்கிகளை உபயோகித்தால்தான், இதுபோன்று துளைத்துச் செல்வதெல்லாம் சாத்தியம். ரைஃபிள்கள், 300 யார்டு வரை பதம் பார்க்கக் கூடியது. ஒருவரைச் சுட்டபிறகு, அடுத்தடுத்து கடந்து சென்று துளைக்கும். அதனால், மக்கள் கூட்டங்களில் ரைபிள்களை உபயோகிக்கக் கூடாது. நாம் குறிபார்த்துச் சுடுபவரையும் கடந்து சென்று, பின்னால் நிற்பவர்களையும் சுடும் ஆபத்து ரைஃபிள் வகைகளில் உண்டு. கூட்டங்களை அப்புறப்படுத்த, முனை தட்டையாக உள்ள புல்லட்களைதான் உபயோகிப்பார்கள். ஸ்நைப்பர் உபயோகிப்பது ரைஃபிளை விடப் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். கூட்டத்தில் ஸ்நைப்பரை உபயோகிப்பதும் தவறு. அதனால், அவர்கள் ஸ்நைப்பரை உபயோகித்திருக்க வாய்ப்பு இல்லை. அது ரைஃபிளாகவே இருக்கும். அப்படி ரைஃபிளை உபயோகிப்பதுமே சட்டத்துக்குப் புறம்பானது” என்றார்.