Published:Updated:

“ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு அர்த்தம்கூட தெரியாது!” - கோவை இஸ்லாமிய இளைஞர்கள் கொதிப்பு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு அர்த்தம்கூட தெரியாது!” - கோவை இஸ்லாமிய இளைஞர்கள் கொதிப்பு...
“ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு அர்த்தம்கூட தெரியாது!” - கோவை இஸ்லாமிய இளைஞர்கள் கொதிப்பு...

“ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு அர்த்தம்கூட தெரியாது!” - கோவை இஸ்லாமிய இளைஞர்கள் கொதிப்பு...

பிரீமியம் ஸ்டோரி

‘சில மாதங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் என்று கோவையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்று வெளிவந்துள்ள தகவலால் கொதித்துக்கிடக்கிறது, கோவை. ஆனால், இதில் எங்களுக்குத் தொடர்பு இல்லை என்கிறார்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள். விசாரித்தோம்.

“ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு அர்த்தம்கூட தெரியாது!” - கோவை இஸ்லாமிய இளைஞர்கள் கொதிப்பு...

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா மாநிலத் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலைசெய்யச் சதித்திட்டம் தீட்டியதாகச் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சம்சுதீன், சலாவுதீன், கோவையைச் சேர்ந்த முகமது ஆசிக், ஆட்டோ பைசல், சாகுல், திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகிய ஏழு இளைஞர்களைக் கடந்த செப்டம்பர் மாதம் கோவை வெரைட்டி ஹால் போலீஸார் கைதுசெய்து, சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில்தான், கோவையில் கைது செய்யப்பட்ட நபர்கள், ஃபேஸ்புக் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது என்கிறார்கள். இந்த ஏழு நபர்கள் இலங்கை குண்டுவெடிப்புக்குக் காரணமான ஜாஹ்ரனுடன் தொடர்பில் இருந்தார்கள் என்றும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஜாஹ்ரன் சந்தித்துப் பேசியதை இவர்கள்மூலம் தெரிந்துகொண்டு இலங்கைக்குத் தெரியப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து, ஜாமீனில் வந்திருக்கும் முகமது ஆசிக்கிடம் பேசினோம். “சென்னையைச் சேர்ந்த ஃபேஸ்புக் நண்பர்கள், ஒரு திருமண விழாவுக்காக கோவைக்கு வந்திருந்தார்கள். ஆனால், நாங்கள் இந்து மதத் தலைவர்களைக் கொலைசெய்ய திட்டமிட்டதாகச் சொல்லி, எங்களைக் கைதுசெய்தது போலீஸ்.

“ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு அர்த்தம்கூட தெரியாது!” - கோவை இஸ்லாமிய இளைஞர்கள் கொதிப்பு...

குர் ஆன் குறித்து எனது ஃபேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி எழுதுவேன். சில இந்து மதப் பற்றாளர்கள் அவற்றை விமர்சனம் செய்வார்கள். எங்களுக்குள், ‘நாங்களும் தமிழர்கள்தான்’ என்கிற ரீதியில் வாதம் இருக்குமே தவிர, கொலை செய்வதற்கு எல்லாம் நாங்கள் திட்டமிடவில்லை. எங்களுடன் கைதாகிய ஆட்டோ பைசலின் வீட்டிலிருந்து மூன்று லட்சம் ரூபாயை போலீஸார் எடுத்துக்கொண்டார்கள். அவரை டார்ச்சர் செய்து, நாங்கள் சதித்திட்டம் தீட்டியதாகவும், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் வாக்குமூலம் வாங்கிக்கொண்டார்கள். ஆனால், அவர்களிடம் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என்றால் எங்களுக்கு ஜாமீன் கிடைத்திருக்குமா... ஐ.எஸ்.ஐ.எஸ் என்பதற்கான அர்த்தம்கூட எங்களுக்குத் தெரியாது. இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க வேண்டும் என்பதே என்.ஐ.ஏ-வின் நோக்கம்” என்றார்.

மேற்கு மண்டல ஐ.ஜி-யான பெரியய்யாவிடம் பேசினோம். ‘‘எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களைக் கைதுசெய்து முதல்கட்ட விசாரணையைத்தான் நடத்தினோம். அதன்பிறகு, இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டுவிட்டது. எனவே இதுகுறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை’’ என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி,  படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு