Published:Updated:

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!
பிரீமியம் ஸ்டோரி
உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

Published:Updated:
உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!
பிரீமியம் ஸ்டோரி
உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

பொள்ளாச்சியை அதிரவைத்த ‘ரேவ் பார்ட்டி’!

பாலியல் வழக்கு ஏற்படுத்திய காயங்களின் சுவடுகள்கூட இன்னும் மறையாத பொள்ளாச்சி மக்களுக்கு அடுத்த பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது, தென்னந்தோப்பில் நடைபெற்ற ‘ரேவ் பார்ட்டி’. டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெற்றுவந்த ரேவ் பார்ட்டி எனப்படுகிற ‘நள்ளிரவு போதை நடனம்’ தற்போது, பொள்ளாச்சியையும் ஆட்டிவைத்திருக்கிறது.

பொள்ளாச்சியை அடுத்த சேத்து மடை பகுதியில் தென்னந்தோப்பில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சொகுசு விடுதியில்தான் இந்த ரேவ் பார்ட்டி நடந்திருக்கிறது. அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்தப் பார்ட்டியில் ஈடுபட்ட இளைஞர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் நடந்தது அந்த ரிசார்டில்?

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

நம்மிடம் பேசிய அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், “அண்ணா நகருக்குப் பக்கத்துல கணேசன்ங்கி றவர்க்குச் சொந்தமா ஒரு தென்னந் தோப்பு இருக்கு. அதுல ‘அக்ரி நெஸ்ட்’ங்கிற ரிசார்ட் இருக்கு. அதுல சுற்றுலாப் பயணிகள், குடும்பமா வந்து அடிக்கடி தங்குவாங்க. அது வழக்கமா நடக்குற விஷயம்தான். ஆனா போன 3-ம் தேதி அன்னிக்குப் பொழுது சாய்ற நேரம்... சாரை சாரையா விலை உயர்ந்த பைக்குகளும் கார்களும் அந்த ரிசார்ட்டுக்குள்ள போச்சு. எப்பவும் ஒண்ணு ரெண்டு கார்கள்தான் வரும். அன்னிக்கு வழக்கத்துக்கு மாறா, அத்தனை பைக்குகளும் கார்களும் படுவேகத்துல போனப்பவே எங்களுக்கு ஏதோ சரியா இல்லையேன்னு தோணுச்சு. இருந்தாலும் ஏதாவது ஃபங்ஷன் நடக்கும்போலன்னுட்டு இருந்துட் டோம். அன்னிக்கு ராத்திரி 11 மணிக்குக் காதெல்லாம் கிழியுற அளவுக்குப் பயங்கரமான சத்தம். ஊர் அடங்குன நேரத்துல இப்படி திடீர்னு சத்தம் கேக்கவும் எல்லாரும் பயந்துட் டாங்க. என்னமோ ஏதோனு தோப்புக் குள்ள போய் எட்டிப் பார்த்தா… உள்ள எல்லாரும் கூத்தும் கும்மாளமுமா இருந்தாங்க. அவ்வளவு பேரும் நிறை போதையில் இருந்தாங்க. உடனே போலீஸுக்குப் போன் பண்ணிட்டோம். கோயம்புத்தூர் எஸ்.பி சுஜித்குமார், போலீஸ் படையோடு ஸ்பாட்டுக்கு வந்துட்டார். ஏதோ சரக்கைக் குடிச்சுட்டு ஆட்டம் போடுறாங்கனுதான் நினைச்சோம். போலீஸ் வந்து விசாரணை செஞ்ச பிறகுதான் அந்தப் பசங்க விதவிதமான போதைப் பொருள்களையெல்லாம் பயன்படுத்திருக் காங்கனு தெரிஞ்சது. அத்தனை பசங்களோட ஒரு பொண்ணும் வந்துருந்துச்சாம். போதையில ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா என்ன ஆகிருக்கும்? எங்க ஊர் மானத்தை வாங்குறதுக் குன்னே எங்கெங்கிருந்தோலாம் வர்றாங்க” என்றனர் கவலையோடு.

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீஸாரிடம் பேசினோம். “பாலக்காட்டைச் சேர்ந்த விஷ்ணு விஜயன், டெல்லியைச் சேர்ந்த ஆகாஷ் ரெண்டு பேரும்தான் இந்த ரேவ் பார்ட்டியை ஏற்பாடு பண்ணிருக்காங்க. வழக்கமா நகரத்துக்கு ஒதுக்குப்புறமா வெளியில தெரியாம இருக்குற பகுதிகள்லதான் ரேவ் பார்ட்டி நடக்கும். அதுவும் ரகசியமாத்தான் நடக்கும். போதைக்கும் இந்த மாதிரி கூத்துக்கும் ஆசைப்படுற இளைஞர்களை ஆன்-லைன் மூலமாக ஒருங்கிணைச்சு ரேவ் பார்ட்டி நடத்துவாங்க. இவங்க இன்ஸ்டாகிராம் மூலமாக இணைஞ்சுருக்காங்க. ஓர் ஆளுக்கு 1,200 ரூபாய் கட்டணம் வாங்கியிருக்காங்க. டெல்லி யிலிருந்து கரன் தல்வார்ங்கிற மியூசிஷியனை வரவழைச்சுருக்காங்க. கோயம்புத்தூர்ல இருந்து தரமான ஸ்பீக்கர் சிஸ்டங்களைக் கொண்டு வந்திருக்காங்க.

‘அக்ரி நெஸ்ட்’ அனுமதி இல்லாத ரிசார்ட்தான். ஆனா, இதுக்கு முன்னாடி அங்க இந்த மாதிரி பார்ட்டியெல்லாம் நடந்ததில்லை. அதிகமான பணம் கிடைக்குதுங்கிறதுக்காக என்ன, ஏதுனு விசாரிக்காம பார்ட்டி நடத்த ரிசார்ட் உரிமையாளர் அருண் பிரதீப்பும் தோப்போட உரிமையாளர் கணேஷும் இடம் கொடுத்துருக் காங்க. பார்ட்டியில கலந்துக்குறதுக்காக மொத்தம் 163 பேர் வந்துருக்காங்க. அதுல 140 பேர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். மீதிப்பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க. இவங்கள்ல யாருக்குமே ஒருத்தரை ஒருத்தர் தெரியாதுங்குறது தான் முக்கியமான விஷயம். ஒரு சிலருக்குத்தான் முன் அறிமுகம் இருந்துருக்கு. அவ்வளவு பேரையும் ஒண்ணா இணைச்ச ஒரே விஷயம் போதைதான்.

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!
உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

கஞ்சா, கொகைன், ஹாசிஷ் (கஞ்சா எண்ணெய்), எம்.எம்.டி.ஏ டிரக்ஸ்னு சொல்லக் கூடிய போதை மாத்திரைகள்னு போதைக்காகப் பல பொருள்களைப் பயன்படுத்திருக்காங்க. இந்த விஷ்ணு விஜயனும் ஆகாஷும் சேர்ந்து இதுவரை இரண்டு பார்ட்டிகளை கோவாவில் நடத்தியிருக்காங்களாம். அவங்க பயன்படுத்துன பெரும்பாலான போதைப்பொருள்களை கோவா -விலிருந்துதான் வாங்கிட்டு வந்திருக்காங்க. சில பேர் பிட்-காயின் மூலமாக வாங்கினதாவும் சொல்லிருக் காங்க. இப்படியெல்லாம் அவங்க சொன்ன விஷயங்களைக் கேட்டு எங்களுக்கே அதிர்ச்சி ஆகிடுச்சு.

சென்னை, மும்பைல நடக்குற ரேவ் பார்ட்டிகள்ல பொண்ணுகளும் நிறையக் கலந்துக்குவாங்க. நல்ல வேளையா இங்க அந்த மாதிரி எதுவும் இல்லை. ஒரே ஒரு பொண்ணுதான் வந்திருந்துச்சு. அந்தப் பொண்ணும் என்ன நடக்கப்போகுதுனு தெரியாம வந்து மாட்டிக் கிட்டதாச் சொல்லுச்சு. இந்த மாதிரியான சம்பவங்கள், நடந்துகொண்டிருக்கும்போதோ அல்லது நடந்து முடிந்த பிறகோதான் போலீஸுக்குத் தெரிய வருது. பிள்ளைகளைத் தவறான வழிக்குப் போகவிடாம பெற்றோர்தான்  கண்காணிக்கணும்” என்றனர்.

ரேவ் பார்ட்டிக்கு ஏற்பாடுசெய்த விஷ்ணு, ஆகாஷ், போதை பொருள்களைப் பயன்படுத்த அனுமதித்த தோட்டத்தின் உரிமையாளர் கணேசன், ரிசார்ட் உரிமையாளர் அருண் பிரதீப், ஆடியோ சிஸ்டம் அமைத்தவர் என மொத்தம் 14 பேர் மீது பிணையில் வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீஸார். பார்ட்டியில் கலந்துகொண்ட இளைஞர்கள்மீது, பொது இடத்தில் மது அருந்துதல், இரவு நேரத்தில் அவசியம் இல்லாமல் அனுமதியின்றி ஒன்றுகூடுதல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் பரமசிவம், “அனுமதி இல்லாமல் இதுபோன்ற ஏராளமான விடுதிகள் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. தோட்டத்துக்குள் வீடுகள்போல் இருப்பதால், அவற்றைக் கண்டறிய முடிவதில்லை. டாப்-ஸ்லிப், பரம்பிக்குளம், வால்பாறை போன்ற முக்கியமான சுற்றுலா பகுதிகள் இங்கிருப்பதால், ஏராளமானோர் இங்கு வந்து செல்கிறார்கள். ஆன்-லைன் மூலமாக புக் செய்துகொள்கிறார்கள். ரிசார்ட்டுகளுக்குள் என்ன நடக்கிறது என்றெல்லாம் வெளியில் யாருக்கும் தெரிவதில்லை. சுற்றுலா என்ற போர்வையில் இப்படி வரும் பலர், வன விலங்கு வேட்டையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பண்ணை வீடுகள் என்ற போர்வையில் அனுமதி இல்லாமல் செயல்படும் ரிசார்ட்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே பிற்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்” என்றார்.

உச்சந்தலை போதை... உடல் அதிரும் இசை... நள்ளிரவு நடனம்!

கோயம்புத்தூர் எஸ்.பி. சுஜித்குமாரிடம் பேசியபோது, “இந்த விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முறையான விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்திருக் கிறோம். இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க, மற்ற ரிசார்ட் உரிமையாளர்கள் மற்றும் மேனேஜர் போன்றோரை அழைத்துப் பேசுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுபோன்ற விவகாரங்களின்போது பொதுமக்களும் பெற்றோரும் காவல்துறைக்கு உதவியாக இருந்து தகவல் கொடுத்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி