Published:Updated:

திருச்சியில் `ஹைடெக்' விபசாரம்... பலிகடாவாகும் ஏழைப் பெண்கள்!

திருச்சியில் `ஹைடெக்' விபசாரம்... பலிகடாவாகும் ஏழைப் பெண்கள்!

திருச்சியில் `ஹைடெக்' விபசாரம்... பலிகடாவாகும் ஏழைப் பெண்கள்!

திருச்சியில் `ஹைடெக்' விபசாரம்... பலிகடாவாகும் ஏழைப் பெண்கள்!

திருச்சியில் `ஹைடெக்' விபசாரம்... பலிகடாவாகும் ஏழைப் பெண்கள்!

Published:Updated:
திருச்சியில் `ஹைடெக்' விபசாரம்... பலிகடாவாகும் ஏழைப் பெண்கள்!

ழைப் பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் விபசாரக் கும்பலின் அட்டகாசம் திருச்சியில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிலும் விபசாரத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக, இளம் பெண்களைத் தேர்தெடுக்க வாட்ஸ்அப் பயன்படுத்தும் சில பெண்கள், `சம்மதம்' சொன்னால் வீடு தேடிச் சென்று `ஸ்வைப் மெஷின்' மூலம் பணம் வழங்கி `டெக் நூதனங்களைக் கையாள்வதை அறிந்து போலீஸார் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

இதுபோன்ற சீரழிவுச் சம்பவங்கள் பற்றி திருச்சியில் நம்மிடம் பேசிய சிலர், ``ஒருகாலத்தில் திருச்சி ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில்தாம் விபசாரத் தொழில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தது. பின்னர் திருச்சி கே.கே.நகர், பொன்மலை, உறையூர், காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பெண்களை அழைத்து வந்து தொழில் செய்தனர். அரசல் புரசலாக, அக்கம்பக்கத்தினருக்கு விபசாரத் தொழில் பற்றிய விவகாரம் வெளியே தெரிய வரும்போது, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸாரும் சில இடங்களில் ரெய்டு சென்று அவ்வப்போது கட்டுப்படுத்தினர். அதன்பிறகு போலீஸார் கண்டுகொள்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் திருச்சி காவிரிப் பாலம், கரூர் பைபாஸ் சாலை, குட்ஷெட் உள்ளிட்ட மறைவான பகுதிகளில் இப்போதும் விபசாரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. போலீஸாரின் நெருக்கடி அதிகரித்ததால், ஒருசில இடங்களில் விபசாரக் கும்பல் தங்கள் பாணியை மிகவும் ஹைடெக் ஆக மாற்றி விட்டுள்ளனர். 

திருச்சி மாநகரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் குடியேறியுள்ள இந்தக் கும்பல், இளைஞர்களை நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் வளைத்து வருகிறார்கள். மிகவும் நம்பிக்கையானவர்களை வைத்துக் காய் நகர்த்தும் கும்பல், முதலில் சங்கேத வார்த்தைகளைக் குறிப்பிட்டு இளம் பெண்களின் மாடர்ன் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, பிடித்த பெண்களைத் தேர்வு செய்யச் சொல்கிறார்கள்.

பதில் அனுப்பினால், அடுத்து அப்பாயின்மென்ட் கிடைக்கும். இரண்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம்வரை பல்வேறு விதங்களில் அவர்களுக்கான தொகை வசூலிக்கப்படுகிறது. பணத்தை ரொக்கமாகவும், ஸ்வைப் மெஷின் மூலமாகவும் பெறக்கூடிய வகையில் அந்தக் கும்பல் செயல்படுகிறது. பெண்கள் ஏராளமாக இந்தக் கும்பலிடம் இருப்பதால் தொடர்ந்து பல பெண்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். வீடுகளுக்கேச் சென்று வருவதால், பணத்துக்காகப் பல பெண்கள் திசைமாறி விடும் நிலையும் ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் கல்லூரி மாணவிகள் என்பதுதான் கொடுமையான விஷயம். திருச்சியில் உள்ள பிரபல கல்லூரிகளுக்கு அருகிலும், பேருந்து நிலையங்களிலும் சுற்றும் புரோக்கர் கும்பல், பெண்களைக் கண்காணித்து ஏதோ ஒருவகையில் அறிமுகம் ஆவதுபோல் பேச்சுக் கொடுக்கிறார்கள். வலையில் சிக்கும் இளம்பெண்களிடம், பணம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை குறித்து ஆசைவார்த்தை கூறி, அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சிக்க வைத்து விடுகிறார்கள்” என பகீர் கிளப்பினார்.

தொடர்ந்து பேசிய திருச்சியைச் சேர்ந்த சிலர், ``இங்கு நடைபெறும் விபசாரம் குறித்து அவ்வப்போது கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட சிலர் மீது போலீஸார் கைவைக்காமல் இருக்கிறார்கள். அதனால்தான் அந்தக் கும்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பிட்ட காவல் நிலையங்களுக்கு 'வெயிட்' ஆக கவனிப்பு கிடைப்பதால், போலீஸார் கண்டுகொள்வதில்லை.

சிலமாதங்களுக்கு முன்பு, கருமண்டபம் பகுதியில் வாடகை வீட்டில் நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதனையடுத்து போலீஸார் நடத்திய சோதனையில், அங்கு தங்கியிருந்த சில பெண்கள் சிக்கினர். வழக்கமாக மத்தியப் பேருந்து நிலையத்தில் வலம்வரும் டிப்டாப் ஆசாமிகள், அங்குவரும் வெளியூர் ஆட்களைக் கண்டறிந்து நைசாக ஆசைவார்த்தை கூறி, வலையில் வீழ்த்துவார்கள். கூடவே, இந்தக் கும்பல், விபசார வழக்குகளில் கைது செய்யப்பட்டு, காப்பகங்களில் தங்கவைக்கப்படும் இளம்பெண்கள் குறித்த அப்டேட்களுடன் உள்ளதால், ஜாமீனில் வெளியே சென்று, திருந்தி வாழப் பெண்கள் நினைத்தாலும், அவர்களைக் குடும்பத்தோடு வாழவிடாமல், தொந்தரவு செய்து தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் கடலூர் அருகே ஒரு விபசாரக் கும்பல் சிக்கியது. அப்போது கைது செய்யப்பட்டவர்களில் கொல்கத்தா மற்றும் திருச்சியைச் சேர்ந்த பெண்களும் இருந்தார்களாம். இந்தக் கும்பல் திருச்சி மட்டுமல்லாமல் கடலூர், புதுச்சேரி போன்ற இடங்களில் உள்ள அப்பாவி ஏழைப் பெண்களைக் குறிவைத்து வலைவிரிக்கிறார்கள். இதனால், இளைஞர்கள் பலரும் சீரழிந்து வருகிறார்கள். இதைத் தடுக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும்” என எச்சரித்தனர்.

திருச்சி மாநகரக் காவல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ``விபசாரக் கும்பல் குறித்து தகவல் கிடைத்ததால், போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பின் விளைவாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொன்மலைப்பட்டி பகுதியில் வாடகைவீடு எடுத்து விபசாரம் நடத்திவந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிக்கியிருந்த பெண்களில் பெரும்பாலானோர் ஏழைப் பெண்கள். அந்தப் பெண்களை மீட்டுள்ளோம்.

இதேபோல் திருச்சி, கே.கே.நகர்ப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் விபசாரம் நடத்திய கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ், முசிறியை அடுத்த பாளப்படி லோகநாதன், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சுரேஷ், திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த கோபால், தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ், தென்னூர் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் ஆகியோரைக் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்து ஏழு பெண்களை மீட்டோம். இதேபோல் திருச்சி ஏர்போர்ட் பகுதியில் ரம்ஜான் பீவி, மலைக்கோட்டை பகுதியில் லியாகத் அலி ஆகியோரையும் கைது செய்துள்ளோம். லியாகத் அலியுடன் சேர்ந்து விபசாரத் தொழில் செய்துவந்த தங்கம், பானு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைத் தேடி வருகிறோம். எனவே, பொதுமக்கள் தகவல் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று தெரிவித்தனர்..

போலீஸார் உரிய நடவடிக்கைகளை எடுத்தால் சரி...