Published:Updated:

ஏசி வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம் - சொத்துக்காக நடந்த கொலையா?

ஏசி வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம் - சொத்துக்காக நடந்த கொலையா?
ஏசி வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம் - சொத்துக்காக நடந்த கொலையா?

திண்டிவனத்தில் ஏ.சி வெடித்து மூவர் பலியான சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏசி வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம் - சொத்துக்காக நடந்த கொலையா?

திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள சுப்பராய பிள்ளை தெருவில் வசித்து வந்தவர்கள் ஆர்.ராஜ் - கலைச்செல்வி தம்பதி.  இவர்களுக்கு கோவர்த்தன், கௌதமன் என இரு மகன்கள். கோவர்த்தனுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகன் கௌதமனுக்கு ஜூன் 6-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கூட்டுக் குடும்பமாக இவர்கள் வசித்தனர். இரு நாள்களுக்கு முன் ராஜ், கலைச் செல்வி, கௌதமன் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த அறையில் இருந்த ஏ.சி வெடித்து 3 பேரும் பலியானார்கள். மூன்று பேரும் இறந்து கிடந்த அறையில், ரத்தம் வழிந்து ஓடியுள்ளது. கௌதமனின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறி அறை முழுவதும் பரவியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் ரத்தம் வெளியேற வாய்ப்பில்லை. 

ஏசி வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம் - சொத்துக்காக நடந்த கொலையா?

இதனால், கோவர்த்தன் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், விபத்து நடந்த வீட்டில் பெட்ரோல் வாடையும் வீசியுள்ளது. கோவர்த்தன் அறையில் இருந்து சந்தேகத்துக்கிடமான பாட்டில் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சொத்துக்காக மூன்று பேரும் கொலை செய்யப்பட்டார்களா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கலைச்செல்வியின் சகோதரர் ஜெய்சங்கர் திண்டிவனம் போலீஸில் அக்கா, மாமா, கௌதம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ளார். 

கோவர்த்தன் அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்தவர். கூலிப்படையை ஏவி பெற்றோரை, சகோதரரைக் கொலை செய்தாரா என்கிற கோணத்தில் திண்டிவனம் டி.எஸ்.பி கனவேஷ்வரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பெற்றோர் இறந்த பிறகு, ஆம்புலன்ஸுக்குப் போன் செய்த கோவர்த்தன், அப்போது, யாரோ பெற்றோரை வெட்டிவிட்டதாகக் கூறியுள்ளார். போலீஸாரிடத்தில் ஏசி வெடித்ததாகத் தெரிவித்துள்ளார். கலைச்செல்வியின் சகோதரர் அளித்த புகாரில் தன் மாமாவின் கழுத்தில் வெட்டுக்காயம் இருப்பதாகக் கூறியுள்ளார். 

ஏசி வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம் - சொத்துக்காக நடந்த கொலையா?

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பேசினோம். ``சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தபோது ஏ.சி விபத்தில் உயிரிழந்ததற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்பட்டது. அவர்கள் இறந்து கிடந்த விதமும், அங்கு கைப்பற்றப்பட்ட சில பொருள்களும் சந்தேகப்படும்படியாக இருந்தது. அதனடிப்படையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

Vikatan