Published:Updated:

காபி தோட்ட வேலை; அடைத்துவைத்து சித்ரவதை செய்யப்பட்ட தலித்துகள்! - பாஜக பிரமுகர்மீது வழக்கு பதிவு

போலீஸ்

கர்நாடகா மாநிலத்தில், பாஜக பிரமுகர் ஒருவர் தலித் மக்களை 15 நாள்களாக அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காபி தோட்ட வேலை; அடைத்துவைத்து சித்ரவதை செய்யப்பட்ட தலித்துகள்! - பாஜக பிரமுகர்மீது வழக்கு பதிவு

கர்நாடகா மாநிலத்தில், பாஜக பிரமுகர் ஒருவர் தலித் மக்களை 15 நாள்களாக அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
போலீஸ்

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தின் ஜெனுகத்தே கிராமத்தில், பா.ஜ.க பிரமுகர் ஜெகதீஷா கவுடா என்பவர் காபி தோட்டம் வைத்திருக்கிறார். அந்த காபி தோட்டத்தில் பணிபுரியும் ஒரு பெண், தன்னுடைய கரு கலைந்துவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

காபி
காபி

அதில், ``நான் காபி தோட்டத்தில் வேலை செய்துவருகிறேன். வருமானம் குறைவு என்பதால் அவ்வப்போது முதலாளியிடம் கடன் வாங்கி வந்தேன். இந்த நிலையில், என்னுடன் வேலை செய்த சிலர் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டார்கள். அதனால் என்னுடன் சேர்த்து 16 தலித் மக்களை, கடந்த 15 நாள்களாக அடைத்துவைத்து சித்ரவதை செய்துவருகிறார். அவரின் தாக்குதலால்தான் எனக்கு கரு கலைந்தது" எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி குறிப்பிட்ட காபி தோட்டத்துக்குச் சென்றபோது, ​​​​குறைந்தது 8-10 பேர் ஓர் அறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாக உறுதிப்படுத்தினார். அதையடுத்து உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசும் காவல்துறையினர், ``அக்டோபர் 8-ம் தேதி, சிலர் தங்கள் உறவினர்களை ஜெகதீஷா கவுடா சித்ரவதை செய்வதாகக் கூறி பாலேஹொன்னூர் காவல் நிலையத்துக்கு வந்தனர். ஆனால் அன்றைய தினமே, அவர்கள் புகாரை வாபஸ் பெற்றனர். அடுத்த நாள், கர்ப்பிணி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடைத்து வைத்தல்
அடைத்து வைத்தல்

அதைத் தொடர்ந்து அளித்த புகாரின் பேரில் விசாரணையைத் தீவிரப்படுத்தினோம். கடந்த 15 நாள்களாக அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். 16 உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. அனைவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். புகார்தாரரின் கூற்றுப்படி, 16 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் ஜெகதீஷா கவுடாவிடம் கடன் வாங்கியிருக்கின்றனர். கடன் வாங்கிய சிலர் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே மீதமுள்ளவர்களை ஓர் அறையில் பூட்டி வைத்திருந்திருக்கிறார்.

காவல்துறை
காவல்துறை

ஜெகதீஷா கவுடா, அவர் மகன் திலக் கவுடா மீது தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடிவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.