Published:Updated:

`சொந்த நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள்!'- திருச்சியில் ஒரேநேரத்தில் தற்கொலை முடிவை எடுத்த 19 அகதிகள்

குற்ற வழக்குகள் முடிந்தும் தங்களை அரசு விடுதலை செய்ய மறுப்பதாகக் கூறி சிறப்பு முகாம்வாசிகள் 19 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகாம்வாசிகள் போராட்டம்
முகாம்வாசிகள் போராட்டம்

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மத்தியச் சிறைச்சாலை அமைந்துள்ளது. அதே சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு குற்ற வழக்குகளில் சிக்கிய இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறப்புமுகாம் சிறைச்சாலையைப் போல் இல்லாமல், அனைத்து வசதிகளும் உள்ள விடுதியைப் போன்று இருக்கும். கூடவே 24 மணி நேரக் காவல் கண்காணிப்பு இருக்கும்.

இங்குள்ள வெளிநாட்டுக் கைதிகள், `வழக்கு முடிந்தும் தங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளதால், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

திருச்சி மத்தியச் சிறைச்சாலை
திருச்சி மத்தியச் சிறைச்சாலை
`திருச்சி டு ஹரியானா; ஒற்றைப் புகைப்படம்!’- தப்பிய நைஜீரியக் கைதியைத் துரத்திப் பிடித்த தனிப்படை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்ற அவரை, ஹரியானாவில் பிடித்த திருச்சி தனிப்படை போலீஸார் மீண்டும் திருச்சிக்குக் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஸ்டீபன் ஜான் அவரின் சொந்த நாடான நைஜீரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, ` எங்களையும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும், சிறைக்குள் அதிகாரிகள் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்' எனக் குற்றம்சாட்டிய சிறைவாசிகள் 65 பேர் நேற்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். `சிறைக் கைதிகளைப் போல எங்களிடம் கெடுபிடிகள் காட்டக் கூடாது' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முகாம்வாசிகள் முன்வைத்தனர்.

தீக்குளிக்க முன்றவரைக் காப்பாற்றும் சக அகதிகள்
தீக்குளிக்க முன்றவரைக் காப்பாற்றும் சக அகதிகள்

இன்று காலையும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, இலங்கையைச் சேர்ந்த கவிஞன், விமலன், சிவசங்கர், ஹரிஹரன் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த மொபின் உள்ளிட்ட 19 பேர் மயங்கிக் கிடந்தனர். இதில், ஹரிஸ்ராம் என்பவர் கெரசினை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த சக அகதிகள் அவரைத் தடுத்துக் காப்பாற்றினர்.

19 பேரும் அதிகப்படியான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. மயங்கியநிலையில் கிடக்கும் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 5 ஆம்புலன்ஸ்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தது.

சிறப்பு முகாம் வாசிகள் போராட்டம்
சிறப்பு முகாம் வாசிகள் போராட்டம்

ஆனால், அந்த ஆம்புலன்ஸ்களில் ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.