Published:Updated:

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜெகன்மோகன் ரெட்டி!

விகடன் விமர்சனக்குழு
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜெகன்மோகன் ரெட்டி!
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜெகன்மோகன் ரெட்டி!
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜெகன்மோகன் ரெட்டி!

ஐதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சென்சால்குடா மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் இன்று வெளியே வந்தார். அவருக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டு, சென்சால்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்த கடந்த 16 மாதமாக சிறையிலிருந்த அவர் இன்று வெளியே வந்தார்.

##~~##
ஜெகன்மோகன் ரெட்டி வெளியே வருவதைத் தொடர்ந்து, சிறைக்கு வெளியே காத்திருந்த ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நடனமாடியும், பாடல்களைப் பாடியும் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.