Published:Updated:

‘வெளியில் சென்ற பெற்றோர்; குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகள்!’- அரக்கோணத்தில் மீண்டும் துயரம்

அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த குழந்தைகள்
உயிரிழந்த குழந்தைகள்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மேலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற முனுசாமி. செங்கல்பட்டு அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைசெய்கிறார்.

பெண் குழந்தை ஹரினி
பெண் குழந்தை ஹரினி

இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு ஹரினி (4) என்ற பெண் குழந்தையும், தர்ஷன் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இன்று மதியம் சுரேஷும் அவரது மனைவியும் வெளியில் சென்றனர்.

வீட்டில் தனியாக இருந்த இரண்டு குழந்தைகளும் அருகிலிருந்த குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மண் சரிந்து குளத்துக்குள் தவறி விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

ஆண் குழந்தை தர்ஷன்
ஆண் குழந்தை தர்ஷன்

இதுபற்றி, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாணாவரம் காவல்துறையினர், குளத்திலிருந்து இரண்டு குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பிவைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், மேலேரி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

க்ரைம்
க்ரைம்

இதே பாணாவரம் பகுதியில், கடந்த 5-ம் தேதி, இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளைப் பெற்றோர் கவனமாகப் பார்த்துக்கொள்வதும், கண்காணிப்பில் இருப்பதும், அவசியம் என்பதை உணர்த்துகிறது, இதுபோன்ற சம்பவங்கள்.