Published:Updated:

மோடி பொது கூட்டத்தில் குண்டு வெடிப்பு: 2 தீவிரவாதிகள் கைது!

Vikatan Correspondent
மோடி பொது கூட்டத்தில் குண்டு வெடிப்பு: 2 தீவிரவாதிகள் கைது!
மோடி பொது கூட்டத்தில் குண்டு வெடிப்பு: 2 தீவிரவாதிகள் கைது!
மோடி பொது கூட்டத்தில் குண்டு வெடிப்பு: 2 தீவிரவாதிகள் கைது!

புதுடெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்ற பாட்னா பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.

அந்த பொதுக்கூட்ட மைதானத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பக்ருதீன், அகமது என்ற 2 தீவிரவாதிகளை உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில், தேசிய புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். அந்த இரண்டு தீவிரவாதிகளும், குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தவர்கள் என தெரிய வந்துள்ளது.