Published:Updated:

பொம்மை ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!

காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பிரசார கூட்டங்களில் பொம்மை ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்த திவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கி மே 12ஆம் தேதி வரை 6 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன.

இந்த மாநிலத்திலுள்ள வாரணாசியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், லக்னோவில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் போன்ற முன்னணி தலைவர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், நடிகைகள் ஹேமமாலினி, நக்மாவும் இந்த மாநிலத்தில் போட்டிடுகின்றனர்.

இதையடுத்து, உத்தரபிரதேசத்தில் அனைத்து அரசியல் கட்சி முக்கிய தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களின் பிரசார கூட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு செய்வது மாநில காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்திய எல்லையான காஷ்மீர் அருகே தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் தேர்தல் சமயத்தில் சிறு சிறு குழுக்களாக இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பிரசார கூட்டங்களில் பொம்மை ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் கொண்டு ரிமோட் மூலம் தாக்குதல் நடத்த இருப்பதாக அம்மாநில காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் வான்வழியாகவும் தாக்குதல் நடத்தலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, உத்தரபிரதேச மாநில எல்லையில் காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய தலைவர்களின் பிரசார கூட்டத்திற்கும் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.