Published:Updated:

சென்ட்ரலில் குண்டு வெடித்த ரயில் பெட்டிகளில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு!

Vikatan Correspondent
சென்ட்ரலில் குண்டு வெடித்த ரயில் பெட்டிகளில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு!
சென்ட்ரலில் குண்டு வெடித்த ரயில் பெட்டிகளில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த ரயில் பெட்டிகளை தேசிய பாதுகாப்பு படை ஆய்வு செய்து வருகிறது.
 

சென்ட்ரலில் குண்டு வெடித்த ரயில் பெட்டிகளில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்த கவுகாத்தி ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் உயிரிழந்தார்.

மேலும் அந்த பெட்டிகளில் பயணம் செய்த 14 பேர் படுகாயம் அடைந்து ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்ட்ரலில் குண்டு வெடித்த ரயில் பெட்டிகளில் தேசிய பாதுகாப்பு படை ஆய்வு!

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு வெடிப்புக்குள்ளான கவுகாத்தி ரயில் பெட்டிகளில் பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 பேர் கொண்ட தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்ட்ரலி்ல் பெங்களூரு போலீஸ் குழு ஆய்வு

இதனிடையே, சென்ட்ரலில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை 5 பேர் கொண்ட பெங்களூரு காவல்துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விட்டல் ஆய்வு

இந்நிலையில், குண்டுவெடிப்பு குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விட்டல், குண்டுவெடிப்பு நடந்த போது பணியில் இருந்த அதிகாரிகளிடமும், குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்.

மேலும், பத்திரிகைகளில் விளம்பரம் அளித்து மக்களிடம் தகவலை பெறவும் விட்டல் முடிவு செய்துள்ளார்.