Published:Updated:

ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

Vikatan Correspondent
 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)
ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

சென்னை: ஆவடி ரயில் நிலையம் மற்றும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
 

 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ரயில் நிலையத்துக்கு இன்று மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஆவடி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளான்.

 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் ஆவடி ரயில் நிலையத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

மேலும், மிரட்டல் விடுத்த நபர் சென்னையில் இருந்து ஒரு ரூபாய் காயின் போனில் இருந்து பேசியது தெரியவந்துள்ளது. அவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

சென்னை சென்ட்ரலில் நேற்று நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து இன்று ஆவடி ரயில் நிலையத்துக்கு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூ வணிக வளாகத்தில் குண்டுவெடிக்கும் என்று இன்று காலை 10 மணிக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் கூறியுள்ளார். உடனடியாக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சினிமா காட்சிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
 

 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

இதைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினர் விரைந்து வந்து வணிக வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் சாலைகளில் நிற்பதால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.
 

 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)

இதனிடையே, வெடிகுண்டு வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

 ஆவடி ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! (படங்கள்)


படங்கள்:
ஆ.முத்துக்குமார்