Published:Updated:

அஸ்ஸாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி!

Vikatan Correspondent
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி!
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி!
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி!

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள் இருவேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜ்கார் மாவட்டம் பாலபாரா கிராமத்தில் இன்று போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே, பாக்ஸா மாவட்டத்தில் நேற்று போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து இரு மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநில போலீசாருடன் இணைந்து ராணுவத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.