Published:Updated:

குஜராத் பவனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: உளவுத்துறை எச்சரிக்கை!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள குஜராத் பவனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நரேந்திர மோடி டெல்லி வரும்போது தங்கும் இடமான குஜராத் பவனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து டெல்லியில் உள்ள குஜராத் பவனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.