Published:Updated:

ஈராக்: தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்கள் கேரளா வந்தனர்!

விகடன் விமர்சனக்குழு
ஈராக்: தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்கள் கேரளா வந்தனர்!
ஈராக்: தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்கள் கேரளா வந்தனர்!

மும்பை: ஈராக்கில் கிளர்ச்சியாளர்களால் விடுவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 46 இந்திய செவிலியர்கள் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர், செவிலியர்கள் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பினர்.

ஈராக்: தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்கள் கேரளா வந்தனர்!

ராக்கில் திக்ரித் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 46 இந்திய செவிலியர்களை கடத்திச் சென்றனர்.

இதையடுத்து, தீவிரவாதக் குழுக்களுடன் பல்வேறு சமூக ஆர்வலர்கள், சர்வதேச அமைப்புகள் மூலம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலனாக கடந்த வியாழக்கிழமை 46 இந்திய செவிலியர் உள்ளிட்ட சிலரை தீவிரவாதிகள் விடுவித்தனர்.

செவிலியர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 747 விமானம், 46 செவிலியர்கள் உள்பட 180 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு மும்பைக்கு வந்தடைந்தது.

ஈராக்: தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்கள் கேரளா வந்தனர்!

இதைத் தொடர்ந்து, பகல் 11.45 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை கேரளா முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றார்.  மேலும், செவிலியர்களின் உறவினர்கள் அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதையடுத்து, செவிலியர்களுக்கு தேவையான முதலுதவி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது மறுபிறவி...

முன்ன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர்கள், ஈராக்கில் இருந்து திரும்பி வருவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், எங்களை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். மீண்டும் ஈராக் செல்ல மாட்டோம் என்றும், இது தங்களுக்கு மறுபிறவி என்றும் அவர்கள் கூறினர்.