Published:Updated:

`ரூ.1.40 லட்சம் தரேன்னு சொன்னான்; எக்ஸாம் எழுதவந்தேன்!'- போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டத்தால் அதிர்ச்சி

எம்.திலீபன்

ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் மீதமுள்ள 40 ஆயிரத்தைத் தேர்வு முடிந்தவுடன் கொடுப்பதாக பேசி ஒப்பந்தம் செய்து கொண்டது மூன்று பேரும் கல்லூரிக்கு கிளம்பி வந்துள்ளனர்.

Santosh Kumar, Deva Prashant, Raghupati
Santosh Kumar, Deva Prashant, Raghupati

ரூ.1,40,000 வாங்கிக்கொண்டு ஆள் மாறாட்டம் செய்து, காவலர் தேர்வு எழுதியவர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகக் காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

சான்றிதழ்
சான்றிதழ்

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் இன்று காலை 10 மணிக்குக் காவலர்கள் தேர்வு தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,692 பேர் தேர்வு எழுத இருந்த நிலையில் நிலையில் 2,972 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

அப்பொழுது தேர்வில் சூப்பர்வைசராக பணியாற்றிய யோகாம்பாள் தேர்வு எழுத வந்தவர்களின் ஹால் டிக்கெட்டை சோதனை செய்துள்ளார். அப்போது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவரது ஹால்டிக்கெட்டை சோதனை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததுள்ளது. அதனால் அவரை தனியாக அழைத்து விசாரித்ததில் அவர் வேறொரு நபருக்காகத் தேர்வு எழுத வந்தது தெரிய வந்தது.

Santosh Kumar, Deva Prashant, Raghupati
Santosh Kumar, Deva Prashant, Raghupati

விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவபிரசாந்த் என்பவருக்காக ரகுபதி என்பவர் தேர்வு எழுதியது தெரியவந்தது. தேவபிரசாந்த்காக அவரது சித்தப்பா மகன் சந்தோஷ் ரகுபதியை தொடர்புகொண்டு, ``எனது தம்பி தேவபிரசாந்த்காக தேர்வு எழுதவேண்டும் அப்படி எழுதினால் உனக்கு பணம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு ரகுபதியும் தேர்வு எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார். ரகுபதி,சந்தோஷ்குமார் இருவரும் திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது."

இதனால் சந்தோஷ் குமார் ரூபாய் 1,40,000 தேர்வு எழுதுவதற்காகக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயைத் தேர்வு எழுதி முடிந்தவுடன் இன்று கொடுப்பதாகவும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டது மூன்று பேரும் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளனர்.

hall ticket
hall ticket

ரகுபதி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது ஊர்ஜிதமானதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகுபதிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ரகுபதி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-1 தேர்வு எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.