Published:Updated:

பள்ளிப் பேருந்துக்குள் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; ஓட்டுநர், பெண் உதவியாளர் கைது- என்ன நடந்தது?

பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

பள்ளிப் பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் நர்சரி வகுப்பு பயின்று வரும் மூன்று வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிப் பேருந்துக்குள் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; ஓட்டுநர், பெண் உதவியாளர் கைது- என்ன நடந்தது?

பள்ளிப் பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் நர்சரி வகுப்பு பயின்று வரும் மூன்று வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( சித்திரிப்புப் படம் )

மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் பள்ளிப் பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் பெண் உதவியாளர் முன்னிலையில் நர்சரி வகுப்பு பயின்று வரும் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

போபாலில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 32 வயதான நபர் ஒருவர் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அந்தக நபர் பள்ளிப் பேருந்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, போலீஸில் கைதாகியிருக்கிறார். ஓட்டுநரின் இந்தச் செயல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல்  தொல்லை
பாலியல் தொல்லை
மாதிரி படம்

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் போலீஸில் புகாரளித்துவிட்டு, ``வியாழக்கிழமை என் மகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பினாள். அவளுக்குச் சாப்பிட சில தின்பண்டங்களைக் கொடுத்தேன். அதன் பின்னர், அவளுக்கு ஆடைகளை மாற்றிவிட்டபோது, ​​​ உள்ளாடையில் ரத்தக் கறையும், அவளின் அந்தரங்க பகுதியில் காயங்களையும் கண்டேன். அப்போது அவளின் உடை மாற்றப்பட்டிருந்தது. அவளுக்கு மாற்று உடையை யாரோ அணிந்து அனுப்பியிருந்தனர். இதைக் கண்டு குழப்பமடைந்த நான், உடையை மாற்றியது யார் எனக் கேட்டேன் அப்போது என் மகளால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அதிர்ச்சியடைந்த நான் வகுப்பாசிரியர், பள்ளியின் முதல்வரை தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் குறித்து கேட்டேன். வகுப்பாசிரியர், `இது குறித்து விசாரணை நடத்துகிறோம்' எனத் தெரிவித்தார். அதையடுத்துதான் தற்போது போலீஸில் புகாரளிக்க வந்தேன்" எனக் கூறினார்.

கைது
கைது
ட்விட்டர்

அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. அதையடுத்து, போலீஸார் சிறுமி கூறிய தகவல்களின்படி பேருந்து ஓட்டுநர், பள்ளியின் பெண் உதவியாளர் (female attendant) இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர்.