Published:Updated:

`திருமண உறவு முறிவுக்குப் பின் ஏற்பட்ட காதல்..' -தேனி இளைஞரால் தாய், மகளுக்கு நேர்ந்த கொடூரம்

சிங்கராஜா
சிங்கராஜா

கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டு, காமயகவுண்டன்பட்டியில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்து அப்பெண்ணின் அழுகுரல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.

`ஜூன் மாதமும் ஒற்றை யானை தாக்குதலும்!’ -கலக்கத்தில் தேனி, தேவாரம் மக்கள்

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த 23 வயதுப் பெண்ணுக்கும் திருச்சியைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் முடிந்து, மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். கம்பத்தில் உள்ள தன் தந்தையின் வீட்டில் அப்பெண் வசித்துவந்துள்ளார்.

இந்த நிலையில், அவரது தோழியான தேவி என்பவரது தம்பியும் கம்பம் தாத்தத்தப்பன்குளம் 1-வது சந்தில் வசிக்கும் செல்லத்துரை என்பவரின் மகனுமான சிங்கராஜாவின் (வயது 23) அறிமுகம் கிடைத்துள்ளது. அப்பெண்ணும் சிங்கராஜாவும் கடந்த ஒரு வருடமாக பழகி வந்துள்ளனர். இருவரும் காதலித்துவந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, அப்பெண்ணை மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார் சிங்கராஜா.

Vikatan

அதன்படி, கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டு, காமயகவுண்டன்பட்டியில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்து அப்பெண்ணின் அழுகுரல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். பூட்டிய வீட்டில் கடுமையான காயங்களுடன் அப்பெண்ணும், அவரின் மூன்றரை வயதுக் குழந்தையும் இருந்ததைக் கண்டு பதறிய அக்கம்பக்கத்தினர், இருவரையும் உடனடியாக மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேல்சிகிச்சைக்காக, இருவரும் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த ராயப்பன்பட்டி போலீஸார் விசாரணை முடிவில் சிங்கராஜாவைக் கைது செய்தனர்.

`போக்ஸோ சட்டத்தில் கைதான தேனி அ.தி.மு.க நிர்வாகி' - கட்சியை விட்டே நீக்கிய தலைமை

`என்ன நடந்தது?' என போலீஸாரிடம் கேட்டோம். ``சிங்கராஜாவுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். நேற்று அப்பெண்ணை தாம்பத்ய உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கராஜா, அப்பெண்ணை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அதைப் பார்த்து அழுத அந்தப் பச்சிளம் குழந்தையை பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். தொடர்ந்து இருவரையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அப்பெண்ணின் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில், சிங்கராஜா மீது போக்ஸோ சட்டப்பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” என்றனர்.

``இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கராஜா மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கொதிக்கின்றனர் கம்பம் பகுதி மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு