Published:Updated:

இந்திய எல்லைக்குள் ஊடுருவ காத்திருக்கும் 200 தீவிரவாதிகள்: ராணுவம் தகவல்

Vikatan Correspondent

ஸ்ரீநகர்: இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக சுமார் 200 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே காத்துக் கொண்டிருப்பதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து  ஸ்ரீநகர் ஜெனரல் கமாண்டிங் லெப்னினன்ட் ஜெனரல் சுப்ரதா சாஹா கூறுகையில், "சுமார் 200 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே இந்திய எல்லைக்குள் நுழைய காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் காஷ்மீர் பள்ளதாக்கில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை பயன்படுத்தி அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அந்த முயற்சியை நமது ராணுவத்தினர் தகர்த்து உள்ளனர்.  சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தால் கண்டோன்மெண்ட் பகுதியில் 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் பாதுகாப்பு வலுவிழக்கவில்லை.

எல்லையில் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பல எல்லை ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. 5 ஊடுருவல்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
3 ஊடுருவலகாரர்கள் கேரன் பகுதியிலும்  2 பேர் மசில் பகுதியிலும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்" என்றார்.