Published:Updated:

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Vikatan Correspondent
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் உயிரிழப்புகள் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான வீடுகள், சாலைகள் இடிந்து சேதம் அடைந்தன. இவற்றை சீரமைத்து இயல்பு வாழ்க்கையை கொண்டுவரும் பணிகளில் ராணுவத்தினர் ஒருபுறம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் இந்த சீரமைப்பு முயற்சியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ சுமார் 200 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் எல்லையில் காத்திருப்பதாக ஏற்கனவே இந்திய ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியிருந்த நிலையில்,
இன்று அதிகாலை காஷ்மீரில் உள்ள தங்தர் பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. காலை 9.30 மணி வரை துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.