Published:Updated:

பூரி ஜெகந்நாதர் கோயில் அருகே மடத்தில் மண்டையோடுகள்!

விகடன் விமர்சனக்குழு
பூரி ஜெகந்நாதர் கோயில் அருகே மடத்தில் மண்டையோடுகள்!
பூரி ஜெகந்நாதர் கோயில் அருகே மடத்தில் மண்டையோடுகள்!
பூரி ஜெகந்நாதர் கோயில் அருகே மடத்தில் மண்டையோடுகள்!

புவனேஸ்வர்: பூரி ஜெகந்நாதர் கோயில் அருகேயுள்ள மடத்தின் வளாகத்தில் இருந்து மூன்று மனித மண்டையோடுகளை போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பூரி-கோனார்க் கடற்கரைச் சாலையில் குஷபத்ரா ஆற்றுப் பாலத்தின் அடியில் 21 மனித மண்டையோடுகள், 3 விலங்குகளின் எலும்புக்கூடுகள் மற்றும் மனித எலும்புத் துண்டுகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோயிலுக்கு வட பகுதியில் அமைந்துள்ள உத்தரப்ர்ஷ்வா மடத்தின் வளாகத்தில் உள்ள காய்கறிச் சந்தையின் கழிவுகளில் மண்டையோடுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காய்கறி வியாபாரி ஒருவர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அந்த மண்டையோடுகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட மண்டையோடுகளை புவனேஸ்வர் தடயவியல் சோதனைக் கூடத்துக்கு, டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மண்டையோடுகள் மிகவும் பழையதாக இருப்பதையடுத்து, மாந்திரீகம் செய்துவிட்டு யாரோ சிலர் அவற்றை மண்ணில் புதைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறினர்.

மேலும் இதுகுறித்து, மர்மச் சாவு என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தடய அறிவியல் குழுவினரின் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாநிதி நாயக் தெரிவித்தார்.