Published:Updated:

ஓடும் பேருந்தில் மீண்டும் பெண் பாலியல் பலாத்காரம்: டெல்லியில் பயங்கரம்!

ஓடும் பேருந்தில் மீண்டும் பெண் பாலியல் பலாத்காரம்: டெல்லியில் பயங்கரம்!
ஓடும் பேருந்தில் மீண்டும் பெண் பாலியல் பலாத்காரம்: டெல்லியில் பயங்கரம்!
ஓடும் பேருந்தில் மீண்டும் பெண் பாலியல் பலாத்காரம்: டெல்லியில் பயங்கரம்!

புதுடெல்லி: டெல்லியின் புறநகர் பகுதியான தாத்ரியில் திருமணமானப் பெண் ஒருவர் ஓடும் பேருந்தில், அதன் ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி 23 வயதான நிர்பயா என்ற பெண் ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 13 நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில், ராம்சிங் என்பவர், கடந்த 2013 ஆண்டு மார்ச் மாதத்தின்போது சிறையில் உயிரிழந்தார். மற்ற 5 பேரில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொருவன் சிறுவன் என்பதால், அவனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் மீண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது  நடந்துள்ளது. தாத்ரி செல்வதற்காக கன்னௌஜ் பகுதியில் இருந்து ஒரு பெண் பேருந்தில் ஏறி உள்ளார். தான் இறங்கும் இடம் வந்ததை கவனிக்காமல் அந்த பெண் இருந்துவிட்டதால், பேருந்து டெல்லி வந்து சேர்ந்திருக்கிறது. உடனே, இது குறித்து ஓட்டுநரிடம் அந்தப் பெண் கூறி இருக்கிறார்.

அதற்கு அந்த ஓட்டுநர், உங்களை தாத்ரி கொண்டு சென்று விடுகிறேன் என்று சொல்லி பேருந்தில் அழைத்து சென்றுள்ளார். அப்போது, பேருந்தில் செல்லும் வழியிலேயே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் பேருந்தின் உதவியாளரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், புகார் பதிவு செய்துள்ள போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.