Published:Updated:

ஆபாசப் படம், பாலியல் துன்புறுத்தல்: கணவனைக் கொன்ற மனைவி!

விகடன் விமர்சனக்குழு
ஆபாசப் படம், பாலியல் துன்புறுத்தல்: கணவனைக் கொன்ற மனைவி!
ஆபாசப் படம், பாலியல் துன்புறுத்தல்: கணவனைக் கொன்ற மனைவி!

இஸ்தான்புல்:  ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்த கணவனின் கழுத்தை மனைவியே அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாசப் படம், பாலியல் துன்புறுத்தல்: கணவனைக் கொன்ற மனைவி!


துருக்கி நாட்டைச்  சேர்ந்த 49 வயதான கோனுல் என்ற பெண்மணிதான் இந்த கொலைச் செயலை செய்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதம்,  67 வயதான ஒஸ்மான் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்கும் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாகவே கழிந்துள்ளது.
 
ஏகப்பட்ட கனவுகளுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த கோனுல், முதல் 20 நாட்கள் அவரது கணவரின்   நடவடிக்கையால் தன் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவே நினைத்துள்ளார்.அதற்கு பின்னர்தான் கணவரின் வக்கிரபுத்தி கோனுலுக்கு தெரிய வந்து கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.

விடிய விடிய ஜெர்மன் நாட்டு தொலைக்காட்சிகளில்  ஆபாசப் படங்களை பார்க்கும்  ஒஸ்மான் , அதே போல தன்னிடத்தில் மனைவியும்  நடந்து கொள்ள வேண்டும் என்று  கட்டாயப்படுத்தியுள்ளார்.
முடியாது என்று மறுக்கும் கோனுலை, வெறித்தனமாக அடித்தும்  துன்புறுத்தியுள்ளார். தினமும் இதே போல் நடந்து வந்துள்ளார்.

இதனால் கடும் மன நெருக்கடிக்கு ஆளான கோனுல், இனியும் இந்த வேதனையை பொறுத்துக்கொள்ள முடியாதென்று முடிவெடுத்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இதுபோல் நடந்துகொள்ள ஒஸ்மான் முயன்றுள்ளார். அப்போது கடும் கோபம் அடைந்த கோனுல், சமையலறைக்குச்  சென்று  கத்தியை எடுத்து வந்து, கணவனின் கழுத்தை கத்தியால் அறுத்து, அவரை துடிக்க துடிக்க கொலை செய்தார். பின்னர் இஸ்பர்ட்டா மாகாண காவல்துறையிடம் சரணடைந்தார்.

இது பற்றி கூறிய  துருக்கிய அதிகாரிகள் "குடும்ப வன்முறை நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படுகின்றனர். மிக சிறிய எண்ணிக்கையில் பெண்கள் தங்களை கொடுமைப்படுத்தும் கணவர்களைக்  கொல்கின்றனர்" என்று தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.