Published:Updated:

போலீஸ் இன்பார்மர் வெட்டிக்கொலை!

போலீஸ் இன்பார்மர் வெட்டிக்கொலை!
போலீஸ் இன்பார்மர் வெட்டிக்கொலை!
போலீஸ் இன்பார்மர் வெட்டிக்கொலை!

நாகர்கோவில்: நாகர்கோவிலில் போலீஸ் இன்பார்மர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாகர்கோவில் கோட்டாறு ரயில்வே ரோடு ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற நாகராஜன்- சீதை தம்பதிக்கு பீமா பீவி, உசன், அரசு, சங்கர் என்ற பிள்ளைகள் உள்ளனர். இதில் பீமா பீவி, சென்னையில் போலீஸ்காரராக உள்ளார்.

இந்நிலையில் திருட்டு மற்றும் மது விற்பனை தொடர்பாக அடிக்கடி போலீசாருக்கு கண்ணன் தகவல் கொடுத்துள்ளார். மேலும் கோட்டாறு காவல் நிலைய போலீஸ் இன்பார்மராகவும் இருந்தார்.

கடந்த 26ஆம் தேதி வள்ளலார் நினைவு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. அன்றைய தினம் திருட்டு மது விற்பனை நடைபெறுவதாக கண்ணன் கொடுத்த தகவல்படி, கோட்டாறு போலீசார் 400க்கும் மேற்பட்ட திருட்டு மது வகைகளை பறிமுதல் செய்தனர். மதுபாட்டில் விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் திருட்டு மற்றும் மது விற்பனை கும்பல் கண்ணன் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு கண்ணன், டீக்குடிக்க சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பியோடி அங்குள்ள பெட்டி கடைக்குள் கண்ணன் நுழைய முயன்றுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விரட்டிச்சென்று கண்ணனை சரமாரி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் போலீஸ் இன்பார்மர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகர்கோவில் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.