Published:Updated:

ஒருதலை காதல்: கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!

விகடன் விமர்சனக்குழு
ஒருதலை காதல்: கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!
ஒருதலை காதல்: கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!
ஒருதலை காதல்: கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!

திருவாரூர்: ஒருதலை காதலில் மன்னார்குடி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெருகவாழ்ந்தான் அருகே உள்ள பெருவிடைமருதூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவரது மகன் ஜெயக்குமார் (28) கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஊர் திரும்பி இருக்கிறார்.

அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி மகள் விக்டோரியா (18), மன்னார்குடியில் உள்ள அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். ஜெயக்குமாரும், விக்டோரியாவும் உறவினர்கள் என்பதால், விக்டோரியாவை ஜெயக்குமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து விக்டோரியா அரசுப் பேருந்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவரை வழிமறித்து ஜெயக்குமார் தன்னை காதலிக்க சொல்லி தகராறு செய்துள்ளார். ஆனால் விக்டோரியா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஜெயக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்டோரியாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் விக்டோரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனே, ஜெயக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இந்த தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ஜெயக்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.