Published:Updated:

வாட்ஸ்–அப்பில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை பரப்பிய வாலிபர்!

விகடன் விமர்சனக்குழு
வாட்ஸ்–அப்பில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை பரப்பிய வாலிபர்!
வாட்ஸ்–அப்பில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை பரப்பிய வாலிபர்!
வாட்ஸ்–அப்பில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை பரப்பிய வாலிபர்!

விஜயவாடா: ஆந்திராவில் காதலியுடனான செக்ஸ் வீடியோவை ஒரு வாலிபர் வாட்ஸ்–அப்பில் பரப்பி உள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள பாயகாபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி மகனும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், காதலியுடன் உல்லாசமாக இருந்ததை அந்த வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ காட்சியை ‘வாட்ஸ்அப்’ மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்வித்துள்ளார். இந்த வீடியோ கட்சிகள் பாயகாபுரம் பகுதி முழுவதும் பரவியதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கும் இது தெரிய வந்துள்ளது.

இதில் அவமானம் அடைந்த அந்த பெண் இதுபற்றி போலீசில் புகார் செய்ய தயங்கி உள்ளார். ஆனால், அகில பாரத மகளிர் அமைப்பு இந்த பிரச்னை குறித்து பாயகாபுரம் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து, உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவான அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.