Published:Updated:

ரூ.17 லட்சத்துடன் கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரம்!

விகடன் விமர்சனக்குழு
ரூ.17 லட்சத்துடன் கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரம்!
ரூ.17 லட்சத்துடன் கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரம்!
ரூ.17 லட்சத்துடன் கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரம்!

டெல்லி: காவலாளி இல்லாத ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்று, ரூ.17.5 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் புதுடெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லி வாசிராபாத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக வங்கி பணியாளர்களால் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையர்கள் அதிகாலை 2 மணிக்கு வந்து, இயந்திரத்தை மினி ஆட்டோவில் வைத்து தூக்கி சென்றுவிட்டனர் என்று தெரிவித்தனர்.

டெல்லியில் கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை தந்திரமாக மூடிவிட்டு பின்னர் கொள்ளையடித்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஏ.டி.எம். இயந்திரத்திற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம்  பதிவாகியுள்ளது. சி.சி.டி.வி. பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்று பேர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். அறை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையில் பாதுகாவலர் இல்லாமல் இருந்துள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ஆம் தேதி இதுபோன்ற ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடிக்கும் முயற்சி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.