Published:Updated:

பாலியல் புகார்: பச்சோரியிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!

பாலியல் புகார்: பச்சோரியிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!
பாலியல் புகார்: பச்சோரியிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!
பாலியல் புகார்: பச்சோரியிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!

புதுடெல்லி: பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான ராஜேந்திர பச்சோரி மீதான பாலியல் புகார் குறித்து அவரிடம் விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரபல சுற்றுச் சூழல் ஆர்வலரான ராஜேந்திர பச்சோரி (74)  பருவநிலை மாறுதல்களுக்கான சர்வதேச குழுவின் தலைவராக உள்ளார். மேலும், அரசு சாரா  எரிசக்தி மற்றும் வளங்கள் மைய (TER) தலைமை இயக்குனராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், பச்சோரிடம் கடந்த 2013ஆம் ஆண்டு இறுதியில் பணியாற்றி தொடங்கிய மாணவி ஒருவர், ராஜேந்திர பச்சோரி மீது லோதி காலனி காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். அதில், பச்சோரி எனக்கு பலவிதங்களில் பாலியல் தொல்லை தருகிறார். எம்.எம்.எஸ். மற்றும் மெயில் மூலமாகவும் தன்னுடன் பச்சோரி பாலியல் உரையாடல்களில் ஈடுபடுகிறார். இதுகுறித்து அமைப்பின் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தேன். அதற்கு பிறகும் பச்சோரியின் தொல்லை தொடர்கிறது எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து, பெண்ணின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பின்தொடர்வது, மிரட்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பச்சோரி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனார். மேலும், விசாரணைக்காக ஆஜராகுமாறும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த பச்சோரி, தன்னை கைது செய்வதில் இருந்து தப்பிக்க, டெல்லி உயர்நீதிமன்றத்தில் 23ஆம் தேதி வரை கைதுக்கு எதிரான முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், பாலியல் புகார் குறித்து பச்சோரியிடம் விசாரணை நடத்த, டெல்லி உயர்நீதிமன்ற பெஞ்ச் அனுமதி அளித்துள்ளது.

ராஜேந்திர பச்சோரி  2007ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.