Published:Updated:

எம்எல்ஏ கொலை வழக்கு: முன்னாள் எம்பிக்கு ஆயுள்!

Vikatan Correspondent
எம்எல்ஏ கொலை வழக்கு: முன்னாள் எம்பிக்கு ஆயுள்!
எம்எல்ஏ கொலை வழக்கு: முன்னாள் எம்பிக்கு ஆயுள்!
எம்எல்ஏ கொலை வழக்கு: முன்னாள் எம்பிக்கு ஆயுள்!

டேராடூன்: உத்தர பிரதேச மாநிலத்தில் மகேந்திரசிங்பாதி எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. டி.பி.யாதவ் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், தாத்ரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மகேந்திர சிங் பாதி. இவர் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி. டி.பி.யாதவ் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரணை கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி அமித்குமார் சிரோகி, குற்றவாளிகளான டி.பி.யாதவ் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, 4 பேரும் டோராடூன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை காலத்தில் 3 குற்றவாளிகள் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.