Published:Updated:

ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!

Vikatan Correspondent
ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!
ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!
ஓடும் ரயிலிலிருந்து சிறுமியை தூக்கி எறிந்த கொடூரன்!

இந்நூர்: ஓடும் ரயிலில் இருந்து 8 வயது சிறுமியை வெளியே தூக்கி எறிந்த கொடூரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேசரத்தில் உள்ள ரத்லாமுக்கும்-மண்டிசோர் என்ற இடத்திற்கும் இடையே ரத்லாம்-ஆக்ரா போர்ட் ரயில் சென்று கொண்டிந்தது அப்பொது, அந்த ரயிலின் பொது வகுப்பு பெட்டியில் அமர்வதில் முகமத் தஸ்லின் (45) என்ற நபருக்கும் சக பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரம் அடைந்த முகமத் தஸ்லின், சண்டையின் இடையே 8 வயது சிறுமியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசி உள்ளார். உடனே விரைந்து வந்த ரயில்வே போலீசார், முகமத் தஸ்லீம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தஸ்லீமால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சிறுமி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயிருக்காக போராடி வருகிறார்.

ஓடும் ரயிலில் நடந்த இந்த கொடூர சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.