Published:Updated:

பிரதமர் வரும் நிலையில் சத்தீஸ்கரில் 300 பேரை சிறைபிடித்து மாவோயிஸ்ட் அட்டகாசம்!

சட்டீஸ்கர்/சுக்மா: பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் வரும் நிலையில், சுக்மா மாவட்டத்தில் 400 பேரை மாவோயிஸ்டுகள் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரதமர் வரும் நிலையில் சத்தீஸ்கரில் 300 பேரை சிறைபிடித்து மாவோயிஸ்ட் அட்டகாசம்!

சத்தீஸ்கர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தண்டேவாடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். ரூ.24,000 கோடி செலவில் இரண்டு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இதற்காக பிரதமர் வர உள்ள நிலையில், சுக்மாவில் கிராமவாசிகள் 400 பேரை மாவோயிஸ்டுகள் சிறைபிடித்து வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுக்மா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரீஷ் ரத்தோடு கூறுகையில், "மரெங்கா கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த நக்சல்கள் அங்கிருந்த ஆண்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச் சென்றனர். அருகில் இருக்கும் சில கிராமங்களில் இதேபோல் ஆண்களை மட்டும் அவர்கள் சிறைபிடித்துள்ளனர்.

மரெங்கா கிராமத்தில் பாலம் கட்ட நீண்ட நாட்களாக நக்சல்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், நக்சல்கள் கண்டிப்பையும் மீறி அங்கு பாலம் கட்டும் பணியில் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர். கிராமவாசிகளை எச்சரிக்கை செய்யும் விதத்திலேயே இந்த சிறைபிடிப்புச் சம்பவம் நடந்துள்ளது" என்றார்.

மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பின்னர் செல்லும் முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு