Published:Updated:

மதுபான விடுதி நடத்த லஞ்சம்: இன்ஸ்பெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

மதுபான விடுதி நடத்த லஞ்சம்: இன்ஸ்பெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.
மதுபான விடுதி நடத்த லஞ்சம்: இன்ஸ்பெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

சிவகாசி: மதுபான விடுதி நிர்வாகியிடம் லஞ்சம் பெற்ற காவல்துறை வருவாய் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்பு துறையிடம் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ராமச்சந்திரன் (வயது 54). சிவகாசியை சேர்ந்தவர் மாயக்கண்ணன். திமுக பிரமுகரான இவர் ஸ்ரீவில்லிப்புத்துார் ரோட்டில் கோல்டன் கிளப் என்ற பெயரில் தனியார் மதுபான விடுதி நடத்தி வருகிறார். சிவகாசி அருகேயுள்ள மானகசேரியை சேர்ந்த ஐய்யப்பன் என்பவர் மதுபான விடுதியை கவனித்து வருகிறார். நள்ளிரவில் மதுபான விடுதி நடத்துவதாக கூறி, டவுன் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் இந்த விடுதி மீது சமீபத்தில் 4 வழக்குகள் வரை பதிவு செய்தார்.

மதுபான விடுதி நடத்த லஞ்சம்: இன்ஸ்பெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

இது தொடர்பாக மதுபான விடுதி மேற்பார்வையாளர் ஐயப்பன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனை அணுகி பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் ஒரு லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது. முதல் கட்டமாக 35 ஆயிரம் ரூபாய் தருவதாக ஐயப்பன் கூறியதை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக ஐயப்பன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரனிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் சிவகாசி அரசு மருத்துவமனை அருகே உள்ள இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனின் வீட்டிற்கு சென்ற ஐயப்பன், இன்று காலை அவரது வீட்டில் வைத்து 35 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தார். 

மதுபான விடுதி நடத்த லஞ்சம்: இன்ஸ்பெக்டரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.

திட்டமிட்டபடி வீட்டை விட்டு ஐயப்பன் வெளியேறியதும், வீட்டை சுற்றி மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தலைமையிலான போலீசார் தடாலடியாக வீட்டிற்குள் நுழைந்து 35 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கையில் வைத்திருந்த இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனை கையும் களவுமாக கைது செய்தனர்.

இது தொடர்பாக  அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம்  வாங்கிய இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் இன்னும் 4 ஆண்டுகளில் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்