Published:Updated:

பாரிமுனையில் நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய பைக்:சாலையோரம் தூங்கிய 3 பேர் பலி

சென்னை : சென்னை பாரிமுனையில் நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய பைக் மோதியதில் சாலையோரம் தூங்கிய 3 பேர் பரிதாபமாகப் பலியாயினர். 

சென்னை பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வருபவர்கள் சின்ன பொண்ணு ,சகுந்தலா,மற்றும் திருநங்கை அப்பு. நேற்று இரவு இவர்கள் 3 பேரும் வியாபாரத்தை முடித்து விட்டு, பாரிமுனை பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே உள்ள துறைமுகம் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் படுத்துத் தூங்கினர்.

நள்ளிரவு 2 மணி அளவில் மின்னல் வேகத்தில் வந்த பல்சர் மோட்டார் சைக்கிள் ஒன்று தாறுமாறாக ஓடி  தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது. மோட்டார் சைக்கிள் ஏறி நசுக்கியதால் 3 பேரின் மார்பு பகுதியில் எலும்புகள் உடைந்து நொறுங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே சின்ன பொண்ணு, சகுந்தலா, அப்பு ஆகிய 3 பேரும் பலியானார்கள்.

மோட்டார் சைக்கிளை அதி வேகத்தில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய 3 வாலிபர்களும், சாலையோரமாக தூக்கி வீசப்பட்டிருந்தனர். அவர்களின் அருகில் சென்று பார்த்த போது, 3 பேரின் உயிருக்கும் ஆபத்து இல்லை என்பது தெரிய வந்தது.  அவர்களது பெயர் சாதிக்,பெரோஸ்,மன்சூர் ,என்பது தெரிய வந்தது. இவர்களில் சாதிக் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். மற்ற 2 பேரும் பின்னால் இருந்துள்ளனர். இதையடுத்து 3 வாலிபர் களும் ஸ்டான்லி ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காகச்  சேர்க்கப்பட்டனர். அங்கு அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பூக்கடை போக்குவரத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  முதல் கட்ட விசாரணையில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து விட்டதாகவும், அதனால்தான் விபத்து நடைபெற்று விட்டது என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு