Published:Updated:

மதுரையில் பயங்கரம்:அதிமுக வட்டச்செயலாளர் வெட்டிக்கொலை

மதுரையில் பயங்கரம்:அதிமுக வட்டச்செயலாளர் வெட்டிக்கொலை
மதுரையில் பயங்கரம்:அதிமுக வட்டச்செயலாளர் வெட்டிக்கொலை

மதுரையில் பயங்கரம்:அதிமுக வட்டச்செயலாளர் வெட்டிக்கொலை

மதுரையில் பயங்கரம்:அதிமுக வட்டச்செயலாளர் வெட்டிக்கொலை

மதுரை: மதுரையில் அதிமுக வட்டச் செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வசந்தநகர் வெங்கடாஜலபுரம் பகுதியைச்  சேர்ந்தவர் ராஜேந்திரன். 56 வயதான  இவர் மதுரை 77ஆவது  வார்டு அதிமுக வட்டச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி அந்தப்  பகுதி அதிமுக கவுன்சிலராக உள்ளார். ராஜேந்திரன் இன்று காலை 5.45 மணியளவில் வெங்கடஜலபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியது. தலை, கழுத்து உள்ளிட்ட 8 இடங்களில் பலத்த வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் ராஜேந்திரன் துடிதுடித்துப்  பலியானார்.

கொலையாளிகள் உடனடியாகத்  தப்பி ஓடி விட்டனர். ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மதுரை கவுன்சிலர் ஜெயலட்சுமி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

உடனடியாக ஆண்டாள் புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்காக ராஜேந்திரன் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜேந்திரனை கொலை செய்த கொலையாளிகள் 6 பேர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் ராஜேந்திரனுக்கு முன்விரோதம் உள்ளதா? அல்லது கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்ததா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மதுரையில் பயங்கரம்:அதிமுக வட்டச்செயலாளர் வெட்டிக்கொலை

கொலையான ராஜேந்திரனுக்கு மனைவி ஜெயலட்சுமி, மகன்கள் சூரிய குமார், கார்த்திக், மருது, மகள் பிரியா ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜேந்திரன் உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டுள்ளதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக ஆண்டாள்புரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுரை மாவட்ட 77 ஆவது  அதிமுக வட்டச்செயலாளராக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் குடோன்சேகர் என்பவர் இருந்துள்ளார். அப்போது நடந்த உட்கட்சி தேர்தலில் இவர் பதவியை இழந்தார். இதில் இவருக்கும், ராஜேந்திரனுக்கு முன் விரோதம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி மோதிக்கொண்டனர்.

மதுரையில் பயங்கரம்:அதிமுக வட்டச்செயலாளர் வெட்டிக்கொலை

போஸ்டர் ஒட்டியதில் ஏற்பட்ட பிரச்சனையில் குடோன்சேகரின் மகன் செந்தில் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளியாக ராஜேந்திரன் உள்பட சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதற்கு பழிக்குப்பழியாக ராஜேந்திரன் இன்று கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக குடோன்சேகரின் மற்றொரு மகன் சங்கர் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு