Published:Updated:

பெண் சிசுக்களை துரத்தும் எமன்கள்...!

பெண் சிசுக்களை துரத்தும் எமன்கள்...!
பெண் சிசுக்களை துரத்தும் எமன்கள்...!

பெண் சிசுக்களை துரத்தும் எமன்கள்...!

பெண் சிசுக்களை துரத்தும் எமன்கள்...!

யிற்றுக்குள் வளரும் கருவும், அந்த கருவை சுமக்கும் தாயின் உட லும் ஆரோக்கியமாக இருக்கிறதா..? இல்லை எதாவது பாதிப்பு இருக் கிறதா..? என்பதை கண்டுபிடித்து அதற்கு தகுந்த  சிகிச்சையை மருத்து வர்கள் அளிப்பதற்காகத்தான்  ஸ்கேன்  கருவிகள் பயன்படுத்தப்படுகின் றன.

ஆனால் இன்று, உயிரைக் காப்பாற்றுவதற்கான ஸ்கேன் கருவிகள், லட்சக்கணக்கான  குழந்தைகளை கருவிலேயே கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன   என்பதுதான் யதார்த்தமான உண்மை.

சேலம் மாவட்டம், ஓமலூரில்  ஒரு தனியார் பாலி கிளினிக்குக்கு சொந்தமான ஸ்கேன் சென்டரில், பெரும் தொகை பெற்றுக் கொண்டு கருவுக்குள் இருப்பது ஆணா? பெண்ணா எனச் சொல்லி விடுவ தாகக் கூறி அந்த ஸ்கேன் சென்டருக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர்கள் முன்பெல்லாம் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஆண் குழந்தையாக பிறந்தால் தாய்ப்பால். பெண் குழந்தையாக பிறந்தால் கள்ளிப்பால் அவ்வளவுதான் முடிந்தது அந்த குழந்தையின் கதை. ஆனால், கருவிலேயே கண்டுபிடித்து பெண் குழந்தை என்றால் கருவிலேயே கொல்வது இந்த காலம்.

ஸ்கேனர்கள் வந்த புதிதில், இதுபோன்று கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என ஸ்கேன் சென்டர்கள் கூறியதையடுத்து, கருகலைப்பு அதிகமாக நடந்தது. அதை தடுப்பதற்க்காக கருவுக்குள் இருப்பது ஆணா...? பெண்ணா..? என்று கண்டுபிடித்து சொல்வது குற்றம் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால், இன் றைக்கு அந்த சட்டத்தை வைத்துதான் ஸ்கேன் செண்ட்டர்கள் அதிக வருமானம் பார்த்துக்கொண்டிருக் கிறார்கள்.

பெண் சிசுக்களை துரத்தும் எமன்கள்...!

ஆம், கரு கலைக்கப்பட்டாலும் அதுபற்றி ஸ்கேன் சென்டர்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்களுக்கு தேவை பணம் மட்டுமே.   இந்த சட்டம் இல்லையென்றால் சாதாரண கட்டணமே வசூலிக்க முடியும். இப்போது சட்டத்தையே மீறி சொல்ல வேண்டும் என்பதற்காக வரைமுறை இன்றி பணம் பறிக்கிறார்கள் ஸ்கேன் சென்டர்காரர்கள்.

அதேநேரத்தில், எல்லா ஸ்கேன் சென்டர்களிலும், 'கருவுக்குள் இருப்பது ஆணா...? பெண்ணா..? என்று கண்டுபிடித்து சொல்வது குற்றம். இங்கு பார்க்கபடுவதில்லை' என ஒரு பெரிய போர்டு மாட்டி வைத்திருக்கிறார்களே ஒழிய, அதை கடைபிடிப்பவர்கள்  சொற்பமானவர்களே. இதனால், பல லட்சம் பெண்சிசுக்கள் இதுபோன்ற ஸ்கேன் சென்டர்களால் கருவிலேயே கலைந்து போகின்றன.

பெண் சிசுக்களை துரத்தும் எமன்கள்...!

இது தொடர்பாக ஸ்கேன் சென்டர் உரிமையாளர் ஒருவரிடம் பேசினோம். “ 'கருவைக் கலைக்க மாட்டோம். சும்மா தெரிஞ்சுக்கிறதுக்குதான் கேக்குறோம்'னு சொல்லி நிறையபேர்  கேட்பாங்க. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றோம்னு சொல்லுவாங்க. மறைமுகமா சொல்லுங்கனு கெஞ்சுவாங்க.

இன்னும் சில பேர் அரசியல்வாதிகள் சிபாரிசோடுகூட வந்து கேட்பாங்க. சில பேர் மிரட்டி கேட்பாங்க. இவ் வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் நாங்க ஸ்கேன் சென்டர்கள் நடத்த வேண்டியிருக்கு'' என்றார்.

-எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: பா. காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு