Published:Updated:

வீடு புகுந்து பலாத்காரம்: இன்ஸ்பெக்டருக்கு ஆண்மை பரிசோதனை!

வீடு புகுந்து பலாத்காரம்: இன்ஸ்பெக்டருக்கு ஆண்மை பரிசோதனை!
வீடு புகுந்து பலாத்காரம்: இன்ஸ்பெக்டருக்கு ஆண்மை பரிசோதனை!

வீடு புகுந்து பலாத்காரம்: இன்ஸ்பெக்டருக்கு ஆண்மை பரிசோதனை!

வீடு புகுந்து பலாத்காரம்: இன்ஸ்பெக்டருக்கு ஆண்மை பரிசோதனை!

திருச்சி: திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்தததாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கு இன்று ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரி மளா. சிலமாதங்களுக்கு முன் திருச்சியில் இன்ஸ்பெக்டராக பணியாற் றிய முருகேசன் என்பவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து முருகேசன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி,  இரவு வீட்டில் தனியாக இருந்த தன்னை  இன்ஸ்பெக்டர் முருகேசன்  வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தாக பரிமளா போலீஸில் புகார் கொடுத்தார்.

மிக நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் காவல்நிலைய போலீஸார், இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது 2 பிரிவுகள் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் காவல் துறை கைது செய்வதற்கு முன் இன்ஸ்பெக்டர் முருகேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் பெற்றார். அவரை தினமும் திருச்சி  கண்டோன்மென்ட் மகளிர்  காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

புகார் மனுகொடுத்தவுடன் இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்யாமல், அவர் ஜாமீன் பெறும் வரை காத்திருந்தது அவரை தப்பவிடும்  முயற்சி என்றும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த பரிமளா, திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலக வளாகம் முன் உண்ணாவிரதம் இருந்தார்.

அதோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3-ல், நீதிபதி அல்லி முன்பு ஆஜரான பரிமளா, இன்ஸ்பெக்டர் முருகேசனுடன் தனக்கு ஏற்பட்ட பழக்கம், அவர் பாலியல் ரீதியாக கொடுத்த தொல்லைகள் பற்றி வாக்குமூலம் அளித்தார். ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சுமித் சரண், இன்ஸ்பெக்டர் முருகேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

வீடு புகுந்து பலாத்காரம்: இன்ஸ்பெக்டருக்கு ஆண்மை பரிசோதனை!

இந்நிலையில் முருகேசனுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார், திருச்சி ஜேஎம்-2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று நீதிபதி முரளிதர  கண்ணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது முருகேசன், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதி, இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவகல்லூரிக்கு முருகேசனை போலீசார் இன்று அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்தனர்.

பாலியல் வழக்கில் அரசியல்வாதிகள் வரிசையில் இப்போது காவல்துறையினரும் சேர்ந்துவருவது கொடுமை.

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்
 

அடுத்த கட்டுரைக்கு