Published:Updated:

டி.எஸ்.பி. சொன்னதைச் செய்தோம்: செம்மரக் கடத்தல் தம்பதி திடுக்கிடும் தகவல்!

டி.எஸ்.பி. சொன்னதைச் செய்தோம்: செம்மரக் கடத்தல் தம்பதி திடுக்கிடும் தகவல்!
டி.எஸ்.பி. சொன்னதைச் செய்தோம்: செம்மரக் கடத்தல் தம்பதி திடுக்கிடும் தகவல்!

டி.எஸ்.பி. சொன்னதைச் செய்தோம்: செம்மரக் கடத்தல் தம்பதி திடுக்கிடும் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டி.எஸ்.பி. சொன்னதைச் செய்தோம்: செம்மரக் கடத்தல் தம்பதி திடுக்கிடும் தகவல்!

வேலூர்: வேலூர் மாவட்ட பாமக பிரமுகர் கொலை சம்பவத்தில் டி.எஸ்.பி. சொன்னதைச் செய்தோம் என்று செம்மரக் கடத்தல் தம்பதி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாதனூர் பாலூரை சேர்ந்த பாமக பிரமுகர் சின்னப்பையன், செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக ஆம்பூர் போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் வேலூர் கலால் துறை டி.எஸ்.பி. தங்கவேல், வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த தம்பதி நாகேந்திரன் - ஜோதிலட்சுமி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான நாகேந்திரன் - ஜோதிலட்சுமிக்கும், டி.எஸ்.பி. தங்கவேலுக்கும் செம்மர கடத்தல் விவகாரத்தில் உள்ள வியாபாரத் தொடர்பு குறித்து முழுமையாக அறிய, ஆம்பூர் தாலுகா போலீசார் நாகேந்திரன், ஜோதிலட்சுமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆம்பூர் நீதிமன்றத்தில்  மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஆனந்த ராஜ், "ஒரு நாள் மட்டுமே போலீஸ் காவல் வழங்க முடியும். விசாரணை முடிந்ததும்  மாலை 5.30 மணிக்குள் நாகேந்திரனையும், ஜோதிலட்சுமியையும் மீண்டும்  ஆஜர்படுத்த வேண்டும். தம்பதியை துன்புறுத்தக்கூடாது"  என்று அனுமதியளித்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார், தம்பதியை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் பாபு ரவிச்சந்திரன், மார்டீன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்து மாலை 5.22 மணிக்கு மீண்டும் ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதைத்தொடர்ந்து தம்பதிக்கு நீதிமன்ற  காவலை 15 நாட்களுக்கு நீட்டித்து, வருகிற 26 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நாகேந்திரன்–ஜோதிலட்சுமியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். காவலில் எடுத்து போலீசார் விசாரித்தபோது, டி.எஸ். பி. தங்கவேலுடனான தொடர்பு குறித்து நாகேந்திரனும் ஜோதிலட்சுமியும் பரபரப்பு தகவல்களைக்  கூறியுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில்,   "டி.எஸ்.பி. தங்கவேலு சொன்னபடிதான் நாங்கள் செயல்பட்டோம். அவர் எங்களுக்கு என்ன யோசனை கொடுத்தாரோ அதன்படியே  அத்தனையையும் செய்தோம். இதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. நாங்கள் செம்மர கடத்தலில் ஏஜெண்ட்டுகளாக செயல்பட்டோம்.

டி.எஸ்.பி. தங்கவேலுதான் செம்மரங்கள் எப்போது வரும் என்பது பற்றியும், வெளியே அனுப்புவது பற்றியும் எங்களுக்கு சொல்வார். நாங்கள் அதை செய்து முடிப்போம். செம்மர கடத்தலுக்கு முழுக்க முழுக்க காரணம் டி.எஸ்.பி. தங்கவேலுதான்" என்று செம்மரக்கடத்தல் தம்பதி கூறியதாக கூறப்படுகிறது.

போலீஸ் காவலில் தம்பதி கூறி இருக்கும் தகவல் பற்றி விசாரிக்க, டி.எஸ்.பி. தங்கவேலுவை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.அதில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு