Published:Updated:

சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில் ரூ.45 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில் ரூ.45 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!
சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில் ரூ.45 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில் ரூ.45 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: சோலார் பேனல் முறைகேடு வழக்கில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சரிதா நாயர் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்த நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும்,ரூ.45 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில் ரூ.45 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரான சரிதா நாயர், தனது காதலரோடு சேர்ந்து கேரளா தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் சோலார் பேனல்களை பொருத்திக் கொடுப்பதாகக் கூறி, பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது கேரளாவிலும், தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக  பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலகப்  பணியாளர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனிடையே சரிதா நாயரின் ஆபாச படங்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும்,இணைய தளங்களிலும் பரவின.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்து வழக்கு நடத்திவருகிறார்.  

சோலார் பேனல் ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சரிதா நாயரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மோசடி புகாரில் கைதான சரிதாநாயர்  ஜாமீனில் விடுதலையானார். இவர் மீது திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் விசாரணைக்காக ஆஜராகி வருகிறார்.

சரிதா மற்றும்  பிஜூ மீது மொத்தம் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவற்றில் முதல் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, இருவரையும் குற்றவாளிகள் என்று கூறி  பத்தனம் திட்டா நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து, சரிதாவுக்கு ரூ. 45 லட்சமும், பிஜுவுக்கு ரூ. 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பால் கேரளா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு