Published:Updated:

50 வயது நபரால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! - வாணியம்பாடி அதிர்ச்சி

கைதுசெய்யப்பட்ட ராமசாமி
கைதுசெய்யப்பட்ட ராமசாமி

வாணியம்பாடி அருகே பேத்தியைப்போல் கருத வேண்டிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயதான நபரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (50). இவர், நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்திருக்கிறார். அப்போது வீதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் நைசாகப் பேசி சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட ராமசாமி
கைதுசெய்யப்பட்ட ராமசாமி

கடைக்குக் கூட்டிச் செல்லாமல், வீட்டுக்குள் அழைத்துச் சென்று, சிறுமியின் வாயில் துணியை அடைத்து பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்து அவர் தப்பிக்க முயன்றிருக்கிறார்.

ராணிப்பேட்டை: கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட சிறுமி! -சிசிடிவி கேமராவில் சிக்கிய சித்தி

கொடூரம் நிகழ்ந்த பின்னரே அந்தப் பகுதி மக்களுக்கு விவகாரம் தெரியவந்தது. சிறுமியை மீட்ட அவர்கள், ராமசாமியைப் பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட ராமசாமி
கைதுசெய்யப்பட்ட ராமசாமி
அடுத்த கட்டுரைக்கு