Published:Updated:

நடத்தையில் சந்தேகம்... பெண்ணை கொலை செய்த கொடூர தாய், தம்பி கைது!

நடத்தையில் சந்தேகம்... பெண்ணை கொலை செய்த கொடூர தாய், தம்பி கைது!
நடத்தையில் சந்தேகம்... பெண்ணை கொலை செய்த கொடூர தாய், தம்பி கைது!

நடத்தையில் சந்தேகம்... பெண்ணை கொலை செய்த கொடூர தாய், தம்பி கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடத்தையில் சந்தேகம்... பெண்ணை கொலை செய்த கொடூர தாய், தம்பி கைது!

நெல்லை: அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கொலை செய்த அவரது தாய் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அனவன்குடியிருப்பைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் வனப்பேச்சியம்மாள் (25). வனப்பேச்சியம்மாள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வனப்பேச்சியம்மாள் மர்மமான முறையில் வீட்டின் குளியலறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். வனப்பேச்சியம்மாளுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், சார் ஆட்சியர் விஷ்ணு இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை செய்து வந்தார்.

சார் ஆட்சியரின் விசாரணையில், வனப்பேச்சியை அவரது தாயார் நட்சத்திரம் மற்றும் தம்பி ஆறுமுக நயினார் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, நட்சத்திரம் (55), ஆறுமுக நயினார் (19) ஆகிய இருவரையும் விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் கைது செய்தார்.

போலீசாரின் விசாரணையில், ''வனப்பேச்சியின் நடத்தையில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. அதனால், நாங்கள் இருவரும் சேர்ந்து வனப்பேச்சியை கொலை செய்தோம்" என்று கூறியுள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட நட்சத்திரம் கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், ஆறுமுக நயினார் நான்குநேரி சீர்திருத்தப் பள்ளியிலும் போலீசார் அடைத்து உள்ளனர்,

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு