Published:Updated:

'கொம்பன்' கார்த்திக் எந்த சமூகம்? கொலையில் முடிந்த திரைப்பட விவாதம்!

Vikatan Correspondent
'கொம்பன்' கார்த்திக் எந்த சமூகம்? கொலையில் முடிந்த திரைப்பட விவாதம்!
'கொம்பன்' கார்த்திக் எந்த சமூகம்? கொலையில் முடிந்த திரைப்பட விவாதம்!
'கொம்பன்' கார்த்திக் எந்த சமூகம்? கொலையில் முடிந்த திரைப்பட விவாதம்!

மானாமதுரை: கொம்பன் படத்தில் கார்த்தி்க் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என இரண்டு வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தால், வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை  நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ராம்நாத். இவர் மானாமதுரை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க வி்ன் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். இதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் பொன்முத்துராமலிங்கம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மானாமதுரை வழக்கறிஞர்கள் சுற்றுலாவாக கொடைக்கானல் சென்றனர்.

அவர்கள் சென்ற வேனில், 'கொம்பன்' திரைப்படம் திரையிடபட்டுள்ளது. அந்த படத்தில் நாயகன் கார்த்திக், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருப்பார். வேனில் அருகே அருகே அமர்ந்து இருந்த ராம்நாத்தும், பொன்.முத்துராமலிங்கமும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ராம்நாத் தான் சார்ந்த சமூகம்தான் கார்த்திக்கின் பாத்திரம் என்று கூறியுள்ளார்.

அதற்கு பொன்முத்துராமலிங்கம் தான் சார்ந்த சமூகம்தான் என்று கூறியுள்ளார். இதனால் வேனிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் பின் கொடைக்கானல் சென்று அங்கும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருநிலையில் ராம்நாத், பொன்முத்துராமலிங்கத்தை அடித்துள்ளார். அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பொன்.முத்துராமலிங்கம், ராம்நாத்தை பழிவாங்க திட்டமிட்டதாக  தெரிகிறது.

'கொம்பன்' கார்த்திக் எந்த சமூகம்? கொலையில் முடிந்த திரைப்பட விவாதம்!

இந்நிலையில் நேற்று இரவு மானாமதுரை வழக்கறிஞர்கள், குற்றாலம் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதில் பொன்முத்துராலிங்கமும், ராம்நாத்தும் கலந்து கொள்ள இருந்தனர். நேற்று இரவு வேனுக்கு மது அருந்தி கடும் போதையில் ராம்நாத் வந்துள்ளார். வேன் கிளம்பும் நேரத்தில் ராம்நாத் மனைவி போனில் அழைத்ததால், ராம்நாத் வேனை விட்டு இறங்கி மனைவியை பார்க்க  சென்றார். நீதிமன்ற வளாகத்தில் நடத்து சென்று ராம்நாத்தை பின்தொடரந்து சென்ற பொன்.முத்துராமலிங்கம் இருட்டான பகுதியில் வைத்து, ராம்நாத் காது பகுதியின் அருகே கத்தியால் குத்தியுள்ளார்.

'கொம்பன்' கார்த்திக் எந்த சமூகம்? கொலையில் முடிந்த திரைப்பட விவாதம்!

இதனால் அலறித் துடித்த ராமநாத்தை சக வழக்கறிஞர்கள் சிகிச்சைக்காக  மதுரைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராம்நாத் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இதனிடையே பொன்.முத்துராமலிங்கம் நேராக மானாமதுரை டி.எஸ்.பி அலுவலகம் சென்று தன்னை கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதோடு, “வழக்கு பதிவு செய்தால்தான் நாளை பேப்பரில் இந்த செய்தி வரும். கொலை செய்த காரணம் வெளியே தெரியவேண்டும்" என்று கூறியுள்ளார்.

மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.

இதனிடையே கொலைக்கு பழிவாங்குவோம் என  பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து குரல் எழும்புவதால், மானமதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- சையது அபுதாஹிர்

படங்கள்:
சாய்தர்மராஜ்