Published:Updated:

அரியலுாரில் மீண்டும் டிரவுசர் கொள்ளையர்கள் கைவரிசை

Vikatan Correspondent
அரியலுாரில் மீண்டும்  டிரவுசர் கொள்ளையர்கள் கைவரிசை
அரியலுாரில் மீண்டும் டிரவுசர் கொள்ளையர்கள் கைவரிசை
அரியலுாரில் மீண்டும்  டிரவுசர் கொள்ளையர்கள் கைவரிசை

அரியலுார்: வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேல் ரொக்கப்பணத்தை பட்டப்பகலில் டவுசர் கொள்ளையர்கள் திருடிச்சென்ற சம்பவம் அரியலுாரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

டவுசர் கொள்ளையர்கள் மீது அரியலூர்,பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் க.அம்பாப்பூரை சேர்ந்தவர்கள் இளங்கோவன், கொளஞ்சி மற்றும் விஸ்வநாதன். உறவினர்களான இவர்கள் வீடுகள் அருகருகே உள்ளது. இந்நிலையில் கடந்த 14 ம் தேதி மதியம், வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடித்து, விட்டு வீட்டிற்கு வந்த இளங்கோவன்,  வீட்டின் பூட்டு உடைக்ககப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் இருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல கொளஞ்சியின் வீட்டிலிருந்தும் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் விஸ்வநாதனின் வீட்டில் 15 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அரியலுாரில் மீண்டும்  டிரவுசர் கொள்ளையர்கள் கைவரிசை

இது குறித்து கயர்லாபாத் போலீசார்,  வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதில் ஈடுபட்டவர்கள் டிரவுசர் கொள்ளையர்கள் ஆக இருக்கக் கூடும் என காவல்துறை சந்தேகிக்கிறது.

ஆறுமாதத்திற்கு முன்பு அம்பாபூர்ருக்கு அருகில் உள்ள பாளையக்குடியில், 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு சென்றிருந்த முருகேசன், நீலமேகம் மற்றும் இளங்கோவன் வீடுகளில் அடுத்தடுத்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து இரும் புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் யார் என்று தெரியாமல் இன்னமும் விசாரணை செய்து வருகிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களாகவே டிரவுசர் அணிந்து கொண்டு 3 பேர் கிராமங்களில் சுற்றி வந்ததாகவும். கொள்ளை சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் டிரவுசர் அணிந்துகொண்டு சிலர் போனதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்தாகவும் சொல்கிறார்கள்.

இதையடுத்து காவல்துறை, டிரவுசர் கொள்ளையர்களில் பழைய குற்றவாளிகளை விசாரித்து வருகிறார்கள்.

-எம்.திலீபன்